“தவெக-வுக்கு ஆதரவு தருவதில் அவசரப்பட முடியாது!” – விஜய்யின் போன் காலிற்குப் பிறகு திருமாவளவன் அதிரடிப் பேட்டி!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திணறி வரும் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் தன்னைத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரியதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். பேட்டியின் போது பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டது உண்மைதான். ஆனால், […]

“தவெக-வுக்கு ஆதரவு தாருங்கள்!” – கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் சி.டி.ஆர். நிர்மல்குமார் சந்திப்பு; பாஜக கூட்டணிக்கு அழைப்பில்லை!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்த அவர், தவெக அரசு அமைய ஆதரவு கோரினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல்குமார், “தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள […]

அனைத்துலக தமிழர் பேரவையினால் கனடாவில் உலக தமிழர் ஆய்வு மாநாடு!

உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலக தமிழர் ஆய்வு மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளதாக அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். அனைத்துலக தமிழர் பேரவை நேற்று (06.05.2026) கனடா மார்க்கம் பிராந்தியத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த மாதம் முக்கியமான மாதம் மெய்சிலிர்க்கும் மாதம் இந்தமாதத்தையும் நாங்கள் நினைவுகூரவேண்டும் அதனை தாண்டி போகமுடியாது. அனைத்துலக தமிழர் பேரவை 2004ம் ஆண்டு […]

தொழிலாளியை தாக்கிய உதவி முகாமையாளருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில் பணிபுரியும் தோட்ட காவலாளி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தோட்ட உதவி முகாமையாளர், எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பகுதியில் அமைந்துள்ள ஆர்.பி.கோ. (RPC) பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மொக்கா தோட்டத்தின் எய்ம்ஸ் பீக் பிரிவில், கடந்த 5 ஆம் திகதி இரவு இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்ட உதவி முகாமையாளரால் தாம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட […]

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 40 நாடுகளுக்கு விசா இலவசம் 

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 40 நாடுகளை சேர்ந்த பிரஜைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு இலவச விசா வசதி (Free Visa) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது அவசியமான ஒன்று என்பதால், குடிவரவு குடியகல்வு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை ஆறு மாதங்களுக்குப் பிறகு மீளாய்வு செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா இல்லையா என்பது […]

மீண்டும் மழை

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(7.5.2026) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் […]

தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கூட்டத்திற்குச் செல்லாதமை குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் எம். பி தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி ஒருதலைப் பட்சமாக இடம்பெறும் செயற்பாடுகள் காரணமாக குறித்த கூட்டத்திலிருந்து வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்று(07.05.2026) கொழும்பில் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்களில் தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கு செல்லாமை தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் […]

“இப்படிப்பட்ட ஜனநாயகவாதியை தோற்கடித்துவிட்டோமே என மக்கள் வருந்துவார்கள்” – ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளிய ஈ.ஆர். ஈஸ்வரன்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பலத்த வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் நிலவிய குழப்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக நிலவிய வதந்திகளுக்குத் தனது அறிவிப்பின் மூலம் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆட்சி அமைக்கத் […]

தவெக – காங்கிரஸ் கூட்டணியால் கிழிந்தது ‘கை’ உறவு! – கும்பகோணம் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி!

தஞ்சை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததன் எதிரொலி, தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அதிரடியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக-விற்கு 38 கவுன்சிலர்கள் இருந்தும், கூட்டணி தர்மத்திற்காக மேயர் பதவி காங்கிரஸிடம் வழங்கப்பட்டது. மேயர் சரவணன் பதவியேற்றது […]

“விஜய்க்குப் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுங்கள்!” – ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அந்த அறிக்கையில், “சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக-வை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க […]