“விஜய்யை ஏன் அழைக்கவில்லை?” – ஆளுநருக்குச் சுப்பிரமணிய சுவாமி கேள்வி; நீதிமன்றம் செல்லப்போவதாக எச்சரிக்கை!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க அழைக்காதது ஏன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், விஜய்யை உடனடியாக அழைத்து ஆட்சியமைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து, அதிக இடங்களைப் பிடித்த தவெக-விற்கு ஆளுநர் […]

“விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்!” – ஆளுநருக்குத் திருமாவளவன் கடும் கண்டனம்; அமித் ஷாவுக்கு எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவான மிக முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வின் தலைவர் விஜய்யைப் பதவியேற்க அழைக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோதமானது என அவர் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “மக்கள் தீர்ப்பின்படி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதே சரியானது. 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் காட்டிவிட்டுப் பதவியேற்க வாருங்கள் என ஆளுநர் நிபந்தனை விதிக்க […]

“திருமாவை முதல்வர் ஆக்குவதே தமிழகத்தைக் காக்கும் வழி!” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் அதிரடி அறிக்கை!

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வரும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தைக் காக்க, விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்துவதே சரியான முடிவாக இருக்கும் என அவர் திராவிடக் கட்சிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். தனது அறிக்கையில் சிந்தனை செல்வன், “நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வியத்தகு அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. இது மக்களின் உணர்வு அல்ல, […]

அரசாங்கத்தில் இணையப்போவதாக பரவும் வதந்திகளை ஹர்ஷ டி சில்வா மறுப்பு

அரசாங்கத்தில் இணையப் போவதாக வெளியாகும் செய்திகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மறுத்துள்ளார். “அரசாங்கம் என்னைத் தேடுகிறது என்பது எனக்குப் பெருமை அளிக்கிறது, அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எனது அரசியல் பாணி வேறுபட்டது. எது சரி எது தவறு என்று சுட்டிக்காட்டுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று அவர் தனது வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பொது நிதி பற்றிய குழுவின் (COPF) தலைவர் என்ற முறையில், அவர் அக்குழுவை […]

“எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், நீங்கள் போட்டியிடுங்கள்!” – ஸ்டாலினிடம் உருகிய தமிமுன் அன்சாரி; நெகிழ்ச்சிப் பின்னணி!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில், அவரை மீண்டும் சட்டமன்றத்திற்குள் அழைத்துச் செல்ல மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி முன்வந்துள்ள அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிமுன் அன்சாரி, அவரிடம் தனது வெற்றிச் சான்றிதழைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருந்தாலும், தலைவர் ஸ்டாலின் […]

எரிபொருள் கொள்வனவு செயல்முறை குறித்து அரசாங்கத்திடம் சஜித் கேள்வி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் (CPC) தொடர்புடைய முறைகேடுகளைத் தெளிவுபடுத்துமாறு கோரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் எரிபொருள் கொள்வனவு செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கடும் கவலைகளை எழுப்பினார். நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் உரையாற்றிய பிரேமதாச, கடந்த 12 மாதங்களில் புதிய விநியோகஸ்தர்களைப் பதிவு செய்தது மற்றும் அவர்களின் விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அத்துடன், கடமைகளை நிறைவேற்றத் தவறிய விநியோகஸ்தர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் வெளிப்படுத்துமாறு […]

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் பிணையை ரத்து செய்யக் கோரியதை அடுத்து, அவரைக் கைது செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளின்படி, சந்திரசேனவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி லஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. எயார்பஸ் (Airbus) லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான […]

பிரித்தானிய பிரஜை இலங்கையில் கைது

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் உனவட்டுன பகுதியில் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 280 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் பிரித்தானிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றுக்கு, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிரடிச் சோதனை நடத்தி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 72 வயதான பிரித்தானிய நாட்டவர் என தெரியவந்துள்ளது. ஹபராதுவ […]

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, அதே கட்சியில் உறுப்பினராக இருக்கும் தெய்வேந்திரம் இந்திரதாஸ், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேற்படி தெய்வேந்திரம் இந்திரதாஸ் ஆகிய நான் தெரியப்படுத்துவது யாதெனில், 2018ம் ஆண்டு முதல் எனது சொந்த நிதியினால் VP அறக்கட்டளை எனும் நிர்வாகத்தை ஸ்தாபித்து தற்சமயம் வரை செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இந்த அறக்கட்டளையில் 2019ம் […]

மட்டக்களப்பு – பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரை இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழிலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும்

மட்டக்களப்பு – பூநொச்சிமுனை தொடக்கம் பெரிய நீலாவணை வரை உள்ள சட்டவிரோத 47 சுருக்குவலை மற்றும் டைனமட் பயன்படுத்தி மீன்பிடி கடல் வளத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு – பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(06.05.2026) ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத […]