ஹபராதுவ பொலிஸ் பிரிவின் உனவட்டுன பகுதியில் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
280 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் கொக்கைன் போதைப் பொருளுடன் பிரித்தானிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்றுக்கு, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிரடிச் சோதனை நடத்தி, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 72 வயதான பிரித்தானிய நாட்டவர் என தெரியவந்துள்ளது.
ஹபராதுவ பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.