சென்னை:
சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
முக்கியக் கோரிக்கைகள்:
மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சென்னை மெட்ரோ 3-ஆம் கட்டத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அடுத்த பிரதமர் விஜய் முழக்கம்:
விழாவில் தவெக தொண்டர்கள் மற்றும் அபிமானிகள் ‘அடுத்த பிரதமர் விஜய்’ என எழுதிய அட்டைகளை உயர்த்திக் காண்பித்தும், தொடர்ந்து முழக்கமிட்டும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
#CMVijay #PMModi #ChennaiIIT #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive