சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்த அறிக்கையில், “சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைப் பெற்றுள்ள தவெக-வை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். பதவியேற்புக்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநர் நெருக்கடி கொடுப்பது ஏற்புடையதல்ல. சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்க வேண்டும். இது தொடர்பாக ‘எஸ்.ஆர். பொம்மை’ வழக்கின் தீர்ப்பை ஆளுநர் நினைவுகூர வேண்டும்” என மு.வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார். விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு விஜய்க்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அறிக்கை தவெக-விற்குப் பெரும் அரசியல் பலத்தை அளித்துள்ளது.
#CPI #MVeerapandian #Vijay #TVK #TNGovernor #BreakingNews #May7 #TamilNaduPolitics #MajorityTest #ConstitutionalRights #ThalapathyVijay #VijayAsCM #LeftPartiesSupport #SRBommaiCase #ElectionResults2026 #NewGovernmentTN #AssemblyUpdate #PoliticalStability #StalinVsVijay #VijayMakkalIyakkam_“`