சென்னை:
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று இடதுசாரி தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோரைச் சந்தித்த அவர், தவெக அரசு அமைய ஆதரவு கோரினார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ஆர். நிர்மல்குமார், “தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியது ஆளுநரின் சட்டப்பூர்வக் கடமை. மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்துள்ளோம்; அவர்கள் ஆலோசித்து முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளனர். தவெக-விற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் எனத் தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சிக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆளுநரின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட சட்டப் போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இடதுசாரிகளின் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்தால், விஜய்யின் பலம் 116-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
#CTR_Nirmalkumar #Vijay #TVK #CommunistParties #CPI #CPIM #BreakingNews #May7 #TamilNaduPolitics #AllianceTalks #MajorityTest #ThalapathyVijay #VijayAsCM #PowerSharing #NewEraTN #StalinVsVijay #ElectionResults2026 #PoliticalStrategy #AssemblyUpdate #VijayMakkalIyakkam_“`