தஞ்சை:
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததன் எதிரொலி, தற்போது உள்ளாட்சி அமைப்புகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் அதிரடியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக-விற்கு 38 கவுன்சிலர்கள் இருந்தும், கூட்டணி தர்மத்திற்காக மேயர் பதவி காங்கிரஸிடம் வழங்கப்பட்டது. மேயர் சரவணன் பதவியேற்றது முதல் அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே அவ்வப்போது ‘பனிப்போர்’ நிலவி வந்தது. இந்நிலையில், மாநில அளவில் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக-வுடன் கைகோர்த்துள்ளதால் ஆத்திரமடைந்துள்ள திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றனர். 20 ஆண்டுகால கூட்டணி முறிந்ததன் முதல் அதிர்வலையாகக் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இது போன்ற மோதல்கள் மாநிலம் முழுவதும் உள்ள இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் பரவ வாய்ப்புள்ளதால் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
#Kumbakonam #DMK #Congress #MayorSaravanan #TVKCongressAlliance #BreakingNews #May7 #TamilNaduPolitics #LocalBodyPolls #NoConfidenceMotion #Vijay #ThalapathyVijay #MKStalin #ThanjavurNews #PoliticalSplit #NewEraTN #VijayAsCM #AllianceBreakup #CorporationPolitics #TamilNews_“`