திருப்பூர்:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக அரசின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கூட்டணிக் கட்சியினர் துரோகம்:
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
“திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே சொல்லாமல் திருட்டுத்தனமாகச் சென்றுவிட்டார்கள். சிலர் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுச் சென்றனர்; சிலர் முதுகில் குத்திவிட்டுச் சென்றனர். எல்லாக் கட்சித் தலைவர்கள் வீட்டுக்கும் முதலமைச்சரே நேரில் சென்று சோபா டெலிவரி செய்தார். தவெக பாணியே வாக்குக்குப் பணம் தருவது அல்ல, ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏ-வையே தூக்குவதுதான்.”
சத்தியபாமாவா? ‘பெட்டி பாமா’வா?:
“சத்தியபாமா என்ற பெயரைத் தற்போது மக்கள் ‘பெட்டி பாமா’ என்று மாற்றிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட 7 எம்எல்ஏக்களைப் பெட்டி கொடுத்துத் தூக்கியுள்ளார் முதல்வர் விஜய். திமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் வழக்கு போடுகிறார்கள்; அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் பெட்டி கொடுக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று கேட்டதற்கு முதலமைச்சர் விஜய்க்கு ஆத்திரம் வந்துவிட்டது.”
சட்டமன்றமா? ஷூட்டிங் ஸ்பாட்டா?:
“சபாநாயகர் ஆக்ஷன் சொன்னால் விஜய் நடிக்கத் தொடங்கி விடுகிறார். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ முதல் சபாநாயகர் வரை பாட்டுதான் பாடுகிறார்கள். நாம் சட்டமன்றத்துக்கு வந்திருக்கிறோமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்றே தெரியவில்லை. முதல்வர் விஜய் இதுவரை அவையில் வாயைத் திறந்து பேசியதாகச் சரித்திரமே இல்லை, மௌனமாகவே இருப்பார். சட்டமன்றம் பிக்பாஸ் போல் ஆகிவிட்டது. ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப முதல்வர் பேசி வருகிறார். எம்எல்ஏக்கள் கார் வேண்டும் என்கிறார்கள்; ஒரு எம்எல்ஏ காதல் தோல்வி பற்றிப் பேசுகிறார்.”
எங்கும் மின்வெட்டு:
“முதலமைச்சர் தொகுதி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என எங்கு பார்த்தாலும் மின்தடை நிலவுகிறது. தேர்தலின்போது தவெக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. போட்டி என்று பார்த்தால், ஒன்று மின்வெட்டு; மற்றொன்று அரிவாள் வெட்டு மட்டும்தான். கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுங்கள்\” என்று உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக முழங்கினார்.
#UdhayanidhiStalin #DMK #TVK #CMVijay #Dharapuram #ByElection2026 #PettiBama #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive