தங்காலை, குடாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, அந்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.