“அத்தனையும் பச்சைப் பொய்; முதலமைச்சரின் ஆடம்பர அறைக்கு 10 கோடி செலவு!” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி பதிலடி!

மதுராந்தகம்:

ஜெம் வீரமணி கைது விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியது அனைத்தும் பச்சைப் பொய் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சரமாரியாக விமர்சித்துள்ளார்.

தகுந்த பாடம் புகட்டுங்கள்:

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து, எல்.எண்டத்தூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், \”அதிமுக சார்பில் வெற்றிபெற்றுவிட்டு, குதிரை பேரத்தில் பெட்டி வாங்கிப் பதவியை ராஜினாமா செய்தவருக்கு இந்தத் தேர்தலில் தகுந்த தண்டனை கொடுங்கள்\” என்று கேட்டுக்கொண்டார்.

அத்தனையும் பச்சைப் பொய்:

“குழந்தைகளைச் சீரழித்தவர்களை நான்தான் கைது செய்தேன் என முதல்வர் விஜய் கூறுகிறார்; அது பச்சைப் பொய். திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட இந்த வழக்கில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விசாரணை வந்தபோது தவெக அரசு தொடர்ந்து வாய்தா கேட்டது. நீதிபதி பொறுமையிழந்து உத்தரவிட்ட பிறகே வீரமணி கைது செய்யப்பட்டார். இரண்டரை மாதம் வாய்தா வாங்கிக் காப்பாற்றியது தவெக அரசுதான்\” என அவர் குற்றம் சாட்டினார். மேலும், வீரமணியை தவெக அமைச்சர் குடும்ப நண்பர் எனக் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆடம்பரச் செலவும் கடனும்:

“தவெக அரசு எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், முதல்வருக்குக் கடல் காற்று நேரடியாகப் பட வேண்டும் என்பதற்காக நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய அறை தயாராகிறது. 4 மாதங்களில் 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். லண்டன் பயணம் எதற்காகப் போனார் என்பது உங்களுக்குத் தெரியும்\” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

#EPS #CMVijay #TVK #AIADMK #GemVeeramani #Maduranthakam #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive

images

“தாராபுரத்தில் தவெக – அதிமுகவினர் இடையே மோதலா?” – பிரச்சாரத்தைத் திசைதிருப்பச் சதி என அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து

7

“சத்தியபாமாவா இல்லை பெட்டி பாமாவா? சட்டமன்றமா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா?” – தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி விளாசல்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக அரசின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி

8557447-aadhavarjuna

“திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை இல்லை!” – எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி குற்றச்சாட்டு!

September 26, 2026

சென்னை: திமுகவின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாக

IMG_8562

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

September 26, 2026

எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

IMG_8561

அதிகரிக்கும் டெங்கு!

September 26, 2026

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை

IMG_8560

தங்காலையில் 2.8 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது !

September 26, 2026

தங்காலை, குடாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

IMG_8559

கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

September 26, 2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர்

IMG_8558

திறந்தவெளிச் சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்

September 26, 2026

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), திறந்தவெளிச் சந்தை மூலம் மின்சாரம் பெறும் உயர் அழுத்த நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 63

14

“அத்தனையும் பச்சைப் பொய்; முதலமைச்சரின் ஆடம்பர அறைக்கு 10 கோடி செலவு!” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி பதிலடி!

September 26, 2026

மதுராந்தகம்: ஜெம் வீரமணி கைது விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியது அனைத்தும் பச்சைப் பொய்

IMG_8557

த.வெ.க தலைவர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்

September 26, 2026

விழுப்புரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சொன்னை நீதிமன்றத்தின் உத்தரவை

IMG_8555

மதுரை வரும் விஜய்!மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம்

September 26, 2026

மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் மதுரைக்கு வருகை தரவுள்ளார்.

IMG_8554

கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; ஜெம் வீரமணி வழக்கில் அமீர்- வெற்றிமாறன் கூட்டறிக்கை

September 26, 2026

ஜெம் வீரமணி விவகாரத்தில் பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்