வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால், சில பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்பதால், அதற்குத் தயாராக வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுபிக் கடலில் எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதுடன், எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடா பகுதியில் வானிலை செயற்பாடுகள் அதிகரிப்பதுமே இதற்கு முக்கியக் காரணமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வறட்சியான வானிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் 28 அல்லது 29 ஆம் திகதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பகுதிகளைப் பொறுத்தவரை, காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால், கடற்றொழிலாளர்கள், கடற்படையினர் மற்றும் கடலோர மக்கள் அவதானமாக இருக்குமாறு வானிலை ஆய்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பலத்த மழைக் காரணமாக அதிகரித்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், மில்லகந்த பகுதியில் குடா கங்கை, பத்தேகம பகுதியில் ஜின் கங்கை மற்றும் தல்கஹகொட பகுதியில் நில்வளா கங்கை ஆகியன தொடர்ந்தும் சிறிய வெள்ள மட்டத்தில் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும், இந்தப் பகுதிகளில் ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பனாடுகம பகுதியில் நில்வளா கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை அடைந்திருந்த போதிலும், தற்போது அதுவும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

images

“தாராபுரத்தில் தவெக – அதிமுகவினர் இடையே மோதலா?” – பிரச்சாரத்தைத் திசைதிருப்பச் சதி என அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து

7

“சத்தியபாமாவா இல்லை பெட்டி பாமாவா? சட்டமன்றமா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா?” – தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி விளாசல்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக அரசின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி

8557447-aadhavarjuna

“திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை இல்லை!” – எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி குற்றச்சாட்டு!

September 26, 2026

சென்னை: திமுகவின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாக

IMG_8562

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

September 26, 2026

எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

IMG_8561

அதிகரிக்கும் டெங்கு!

September 26, 2026

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை

IMG_8560

தங்காலையில் 2.8 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது !

September 26, 2026

தங்காலை, குடாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

IMG_8559

கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

September 26, 2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர்

IMG_8558

திறந்தவெளிச் சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்

September 26, 2026

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), திறந்தவெளிச் சந்தை மூலம் மின்சாரம் பெறும் உயர் அழுத்த நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 63

14

“அத்தனையும் பச்சைப் பொய்; முதலமைச்சரின் ஆடம்பர அறைக்கு 10 கோடி செலவு!” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி பதிலடி!

September 26, 2026

மதுராந்தகம்: ஜெம் வீரமணி கைது விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியது அனைத்தும் பச்சைப் பொய்

IMG_8557

த.வெ.க தலைவர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார்

September 26, 2026

விழுப்புரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சொன்னை நீதிமன்றத்தின் உத்தரவை

IMG_8555

மதுரை வரும் விஜய்!மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம்

September 26, 2026

மதுரை மக்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக, வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் மதுரைக்கு வருகை தரவுள்ளார்.

IMG_8554

கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; ஜெம் வீரமணி வழக்கில் அமீர்- வெற்றிமாறன் கூட்டறிக்கை

September 26, 2026

ஜெம் வீரமணி விவகாரத்தில் பாதுகாக்க முயன்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்