மூன்று உயர் பதவிகளுக்கு அனுமதி

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பிலிப்பைன்ஸூக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜோனின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்லவின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் […]
கிளிநொச்சியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் பரநதன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலியாகிய சிறுவன் கிளிநொச்சி உருத்திரபுரம் – […]
22 மற்றும் நீதித்துறை சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

அரசியலமைப்புக்கான 22 ஆம் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் […]
வௌ்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி பஸ் நிலையம்

நிலவும் பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் நேற்று பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. பஸ் நிலையத்தின் வடிகான் தொகுதி அடைபட்டு மழைநீர் பஸ் நிலையத்தின் ஊடாகப் பாய்ந்ததே இதற்குக் காரணம் என அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பஸ் நிலையம் நீரில் மூழ்கியதால் பயணிகள் மட்டுமன்றி பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, அடுத்த 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை […]
22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நேற்று (25) பாராளுமன்றில் திருத்தங்கள் ஏதுமின்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது, இதற்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதற்கமைய, நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு திருத்தங்கள் இன்றி 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அதேநேரம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு […]
முழங்காவில் – துன்னாவில் முதியவர் யானை தாக்கிப் பலி!

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளைப் பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக சென்றவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த பகுதிக்குச் சென்று தேடியுள்ளனர். இதன்போது, காட்டுயானை தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஜெயபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரே இச்சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஷிராந்தி FCID க்கு கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரியுள்ளார். அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் கடிதம் மூலம் அப்பிரிவுக்கு இதனை அறியப்படுத்தியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதால் இச்சமயத்தில் அப்பிரிவில் ஆஜராகுவதற்கான வாய்ப்பில்லை எனவும், நாடு திரும்பியவுடன் அதில் முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரிலிய சவிய நிதியத்துடன் தொடர்புடைய கணக்கில் […]
பல இடங்களில் இன்றும் மழை

நாட்டின் பல இடங்களில் இன்றும் (26) பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய […]
சிறுநீரக வைத்தியசாலையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு!

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தியாக தீபத்திற்கு வலி.கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி

தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் வியாழக்கிழமை (24) இடம்பெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்பாக தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் உப தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அஞ்சலித்தனர். அஞ்சலி நிகழ்வுகளுக்கு பல்வேறுபட்ட தடைகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் பிரதேச சபையின் முன்பாக தியாக தீபத்தின் உண்ணா நோன்பு நாட்கள் தோறும் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் மிகப் பெரிய திருவுருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு சபை வளாகத்தின் முன்பாக […]