ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில், நேற்று மாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குத் தடை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேட்டை விரைவாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.