யாழ்.பல்கலையில் தையிட்டியை முன்னிறுத்திய ஒரு கலந்துரையாடல்!

தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (27.02.2026) ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித உரிமை பரிமாணங்கள் மற்றும் இனத்துவ அரசு என்பவை தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ம.திருவரங்கன், மூத்த சட்டத்தரணி கு.குருபரன், வலி. வடக்கு பிரதேச சபைத் சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் தையிட்டி விகாரையினால் நிலத்தினை இழந்த சா.சுகுமாரி ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் தி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், பொ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், வலி. வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றுக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

387336-voterid

நாளை ஜனநாயகத் திருவிழா: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு! 1.47 லட்சம் போலீசார் குவிப்பு!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நாளை (ஏப்ரல் 23, வியாழக்கிழமை) காலை

dfed

ஈரானில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 8 பெண்களை விடுவியுங்கள் – ட்ரம்ப்

April 22, 2026

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் 8 ஈரானியப் பெண்களை விடுவிக்குமாறு

Suresh Salley Arrested-828580

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலி இன்று நீதிமன்றத்தில்

April 22, 2026

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர்

p670881394_1274833634739118_5060846348263734419_n

“அன்புமணி தரப்புக்கு அதிரடி தடை!” – தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்த நீதிமன்றம் தடை!

April 22, 2026

சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான அரசியல் போர் நீதிமன்றப் படிகளேறியுள்ள நிலையில்,

Ministry-of-Defence-6

பயங்கரவாத நிதி வழிகளைத் தடுக்க இலங்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது

April 22, 2026

இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பை, ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ (Targeted Financial

1776842448-prof-6

2025 ஆம் ஆண்டை விட 2026 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் – பேராசிரியர் பிரியங்க துனுசிங்க

April 22, 2026

இலங்கையின் 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை விட, 2026 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வளர்ச்சி வீதம் குறைவாகவே

newproject-2024-09-14t201232-735-1726324973

வாக்களிக்கச் சொந்த ஊர் திரும்பும் மக்கள்! பண்டிகைக் காலத்தைப் போல அலைமோதும் கூட்டம்: கிளாம்பாக்கத்தில் பயணிகள் திணறல்!

April 22, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது

pod

நாமல் இங்கிலாந்தில் பெரிய சொத்து வைத்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

April 22, 2026

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ

v

சடலமாக மீட்கப்பட்ட விவசாயியுடைய பிரேத பரிசோதனை வெளியீடு

April 22, 2026

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய

ha

பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – பிரதமர்

April 22, 2026

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப்

GL

சிறப்பு விசாரணையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு அறிவிப்பு இன்னமும் வரவில்லை!

April 22, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை

shammy

ஷம்மி சில்வா ‘போல்ட் அவுட்’: இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன?

April 22, 2026

இலங்கையில் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை