பயங்கரவாத நிதி வழிகளைத் தடுக்க இலங்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது

இலங்கை தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதி கட்டமைப்பை, ‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ (Targeted Financial Sanctions – TFS) மூலம் பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘இலக்கு வைக்கப்பட்ட நிதித் தடைகள்’ என்பது பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அமைப்புகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாகும். இவர்களின் சொத்துக்களை முடக்குதல், நிதிச் அமைப்புகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அவர்கள் நாட்டிற்குள் எந்தவொரு நிதி நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதைத் தடுத்தல் ஆகியவற்றை இவை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இலங்கையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1373 (2001) இற்கு இணங்க இந்தத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வர்த்தமானி (Gazette) அறிவித்தல் மூலம் ஒருவர் அல்லது ஓர் அமைப்பு பெயரிடப்பட்டவுடன், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்குவதற்கும், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை (காணிகள், வாகனங்கள், நகைகள் போன்றவை) பயன்படுத்துவதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் சட்டப்பூர்வமான தடை உடனடியாக அமலுக்கு வரும்.

இந்த நிதித் தடைகளை விதிக்கும் அதிகாரம் வெளிவிவகார அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்தும் ‘தகுதியுள்ள அதிகாரியாக’ (Competent Authority) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, தகுதியுள்ள அதிகாரியின் அலுவலகம் www.competentauthority.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் சொத்து முடக்கல் உத்தரவுகளை பொதுமக்கள் பார்வையிட முடியும்.

பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் பெரும்பாலும் மறைமுகப் பணப்பரிமாற்றங்கள் ஊடாகவே இடம்பெறுவதால், இத்தகைய நிதி கண்காணிப்பு நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பையும் நிதித் துறையின் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்த அத்தியாவசியமானவை என அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.

port cont

கொள்கலன் விவகார விசாரணை: முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க எதிர்க்கட்சி கோரிக்கை

April 22, 2026

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய

namal

2.5 மில்லியன் டாலர் மோசடி: திறைசேரியின் கட்டுப்பாடு குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி

April 22, 2026

தவறான கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டிருப்பது ஒரு சிறிய நிதித் தவறு அல்ல,

dea

“எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” மாற்றுத்திறனாளிகளுக்காக ’தாழ்தள’ பஸ் சேவை ஆரம்பம்

April 22, 2026

லங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “எதிர்காலத்திற்கு அடிவைப்போம்” எனும் தொனிப்பொருளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விசேட

Dead

கிளிநொச்சியில் விபத்து: பாதசாரி உயிரிழப்பு

April 22, 2026

கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப்

sel

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற செல்சி

April 22, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற

photo-collage.png (16)

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடை இழப்புகளுக்கான இழப்பீடுகள் கிடைக்கவில்லை?

April 22, 2026

நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீடுகள் உரிய முறையில் கிடைக்கவில்லை என மடு பிரதேச

sur

இலங்கையில் நடிகர் சூர்யா

April 22, 2026

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா, செவ்வாய்க்கிழமை (21) அன்று காலை சென்னையிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்பிற்குப் பயணம் மேற்கொண்டார்.

theepachelvann

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு சோசலிச மக்கள் மன்றம் கண்டனம்

April 22, 2026

தமிழ் எழுத்தாளர் பிரதீபன் தீபச்செல்வனின் பல இலக்கியப் படைப்புகள் வாரக்கணக்கில் இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, சோசலிச

vikatan_2025-12-31_ra6ig829_695495281b7e2

‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த விவகாரம்: எடிட்டருக்கு முன் ஜாமீன் வழங்க தயாரிப்பு தரப்பு கடும் எதிர்ப்பு!

April 22, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களுக்குப் பிறகு

gold

தங்கத்தின் விலையில் மாற்றம்!

April 22, 2026

கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் (21) ஒப்பிடுகையில்

gur

ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஈரான்!

April 22, 2026

ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகரக் காவலர்கள், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு கொள்கலன் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள்

arre

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சக சட்ட அதிகாரி கைது!

April 22, 2026

சுகாதார அமைச்சகத்தின் ஓய்வுபெற்ற தலைமை சட்ட அதிகாரியான அஹ்மத் ரியாஸ் அஹ்மத், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு, மே