தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த காலங்களில் போலன்றி தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட்டு வருவதுடன் சிறைச்சாலைகளில் யாருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்பட மாட்டாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான சுரேஷ் சலே மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து போன்ற செல்வாக்கு உடையவர்களை கைது செய்ய முடியாது என பேசப்பட்ட போதிலும் சட்டம் தன் கடமையை செய்யும் போது எவரும் தப்ப முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதுடன்,

கடந்த ஆட்சிக் காலங்கள் போன்று அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதுடன், போலியான உடல்நலக்குறைபாடுகள் காரணங்காட்டி சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாறும் சலுகை கலாச்சாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்பதால், இதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் தீர்க்க வேண்டும். அதை விடுத்து வீதிகளில் இறங்கி அரசியல் ஆதாயத்திற்காகப் போராட்டம் நடத்துவது, அவர்களது கடந்த காலத் தவறுகளையே அவர்களுக்கு நினைவூட்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்கள் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக ஆளும்தரப்பிற்கு தாவும் மோசமான அரசியல் கலாச்சாரம் நிலவிய போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அத்தகைய அரசியல் நாடகங்களுக்கு இடமில்லை. சட்டம் மற்றும் நீதிமன்ற விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித தலையீடுகளையும் செய்யாது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான நீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அத்துடன் தங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்ந்துகொண்ட அரசியல்வாதிகள் சத்திமிடுவதும் அரசாங்கத்தின் மீது ‘அரசியல் பழவாங்கல்’ என்ற பழியைச் சுமத்துவதும் தங்களை சமூகத்தின் முன்னிலையில் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆகும்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தங்களது அரசியல் பலத்தை பயன்படுத்தி வழக்குகளிலிருந்து தப்பிக்க முயலும் என்ற காலம் முடிவுக்கு வந்துவிட்டது.

அதேபோல், தற்போதைய எதிர்க்கட்சியினருக்கு ஆட்சியை பிடிப்பதற்கான எந்தவொரு முறையான திட்டமோ, மக்களின் ஆதரவோ இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழற்றது என்ற மக்களின் நம்பிக்கையை சிதைப்பதே எதிர்க்கட்சியினரின் முக்கிய நோக்கமாக உள்ளது. தங்களை போல் தற்போதைய அரசாங்கமும் ஊழல் நிறைந்தது என காட்டி மக்கள் தவறான முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நிரூபிப்பதற்கு போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. கடந்த காலங்களில் பாராளுமனறத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்திய 323 கொள்கலன்கள் தொடர்பான விவகாரம் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டதன் பின்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் ஆதாரங்களையும் வாக்குமூலங்களையும் வழங்காது அமைதியாகிவிட்டனர்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணைத் தகவல்களை திருடி தாங்கள் அவற்றை கண்டுபிடித்தது போன்று எதிர்கட்சியினர் நாடகமாடி வருவதுடன் கடந்த கால சொசுகு வாழ்க்கை மற்றும் அதிகாரம் பறிபோனதால் ஏற்பட்டுள்ள விரக்தியை இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர். நாமல் ராஜபக்சவின் போராட்டம் மற்றும் பெளத்த மதகுருமார்களின் மாநாடுகளுக்கு மக்களின் ஆதரவு சரியாக கிடைக்கவில்லை என்பதுடன் தேசிய மக்கள் சக்தியின் மே தினப்பேரணிக்கான மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சியினருக்கு எந்தவொரு மக்கள் அடித்தளமும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கு 2048 ஆம் ஆண்டு வரைக்கும் பொறுத்திருக்க வேண்டும் என கடந்த கால ஆட்சியாளர்கள் கைவிரித்த நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பதவியேற்று 18 மாத காலத்திற்குள் எந்தவொரு புதிய கடன்களையும் பெறாமல், இதுவரை 8 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வெளிநாட்டுக்கடன்களை செலுத்தியுள்ளது என்பது சாதனையாகும் என்றார்.

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் இரா சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு

844137579_1823350292179398_4868269684370359471_n

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

October 12, 2026

ஈழத் தமிழர் வரலாற்றில் இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலைகளில் ஒன்றான யாழ்_கொக்குவில்பிரம்படி_படுகொலையின்39ஆம்ஆண்டுநினைவு நாள் இன்றாகும் (அக்டோபர் 12, 2026).

gary

நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி

October 12, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமை ஆணையாளரும் 2026 நோபல் சமாதான பரிசை பெற்றுள்ளவருமான நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின்