நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2026.06.15ஆம் திகதி தொடக்கம் 2026.06.30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், கடந்த திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை […]
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை- பிரதி சுகாதார அமைச்சர்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த தீ விபத்து தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா ) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி, யாழ்ப்பாண […]
அம்மா, நான் அவரைப் பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன், சாவதற்காக அல்ல”

களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி என்ற இளம் யுவதி, தான் நீண்ட காலமாக காதலித்த நபருடன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்கு தனது காதலருடன் செல்ல இந்த யுவதி ஆசைப்பட்டுள்ளார். எனினும், காதலர் இவரை அழைக்காமல் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும், மன உளைச்சலும் […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு உண்மைகளை வெளிப்படுத்திய ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கிறோம் – அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப் படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய சகோதர குரு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தன்னுடைய […]
தற்போதைய நிர்வாகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்; செல்வாக்கால் தப்ப முடியாது

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன், செல்வாக்கு அல்லது அரசியல் அதிகாரம் கொண்ட எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் போலன்றி தற்போதைய நிர்வாகத்தில் சட்டம் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட்டு […]
மீனவர் குடும்பங்களை கொக்கிளாயில் நிரந்தரமாக குடியேற்ற அனுமதிக்க முடியாது!

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நீர்கொழும்பு உள்ளிட்ட ஏனைய வௌியிடங்களில் இருந்து காலத்திற்கு காலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்து செல்லும் 244 மீனவர் குடும்பங்களை கொக்கிளாய் பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்யாத விடயத்தை இந்த அரசாங்கம் செய்வதை தாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் […]
ஈஸ்ட் வில்லேஜில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேக நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

கால்கரி (Calgary) நகரின் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகக் தேடி வருகின்றனர். புதன்கிழமை மதியம் 3 மணியளவில், 7-ஆவது அவென்யூ எஸ்.இ. (7th Avenue S.E.) அருகே உள்ள 4-ஆவது ஸ்ட்ரீட் எஸ்.இ. (4th Street S.E.) பகுதியில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயுதப் பிரயோகத்துடன் கூடிய தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்கு கத்திக் குத்துக் […]
கனடாவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை:’ வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விருப்பமில்லை என டிரம்ப் அதிரடி

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான இலவச வர்த்தக ஒப்பந்தமான ‘கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்’ (CUSMA / USMCA) வரவிருக்கும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நான் இதைப் புதுப்பிக்க விரும்பவில்லை” என்று புதன்கிழமை தெரிவித்துள்ளார். “கனடா அல்லது மெக்சிகோவிடம் உள்ள எதுவும் நமக்குத் தேவையில்லை. ஆனால் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் நம்மிடம் உள்ளன” என்று அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசும்போது குறிப்பிட்டார். இந்த […]
டெம்பிள் இல்லத்தில் பெண் மற்றும் குழந்தை சடலமாகக் கண்டெடுப்பு: கால்கரி போலீஸ் தகவல்

கால்கரி (Calgary) நகரின் டெம்பிள் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த இரண்டு மரணங்கள் குறித்து கால்கரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதன்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இருக்கும் நபர்களின் நலம் குறித்துச் சரிபார்ப்பதற்காக (Welfare Check) அதிகாரிகள் சென்றதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்தபோது, 40-களில் மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் 10 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை சடலமாகக் கிடப்பதை போலீஸார் கண்டறிந்தனர். கடந்த ஆறு வாரங்களில், […]