சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையேயான அரசியல் போர் நீதிமன்றப் படிகளேறியுள்ள நிலையில், இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் பரப்புரையின் போது டாக்டர் ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடை கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை 13-வது உரிமையியல் நீதிமன்றம், அன்புமணி ராமதாஸ் தரப்பு போட்டியிடும் 18 தொகுதிகளிலும் டாக்டர் ராமதாஸின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தந்தையே மகனுக்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை வாங்கியிருப்பது பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#DrRamadoss #AnbumaniRamadoss #PMK #CourtOrder #TNElection2026 #PoliticalCrisis #ChennaiCityCivilCourt #LegalBattle #FatherVsSon #TamilPolitics #VanniyarPolitics #ElectionUpdate #BreakingNews #PMKSplit #ADMKAlliance #SasikalaAlliance #TamilNaduPolls #StayOrder #JudicialUpdate #ViralPolitics