பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – பிரதமர்

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகக் காணப்படும் பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

பராமரிப்புச் சேவைகள் பொருளாதார மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்குப் பங்களிக்கும் அடிப்படை அம்சங்களாகும். , அதனை இனிமேலும் புறக்கணிக்க இயலாது.

தெற்காசிய நாடுகளின் பங்கேற்புடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை நடைபெறும் இந்தப் பிராந்திய நிகழ்ச்சியானது, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச பயிற்சி மையம் (ITCILO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி, நாடுகளுக்கிடையிலான அனுபவப் பகிர்வு, ஆற்றல் அபிவிருத்தி மற்றும் பாலின ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிலையான பொருளாதாரத்திற்கான வழிகளைக் கண்டறியும் ஒரு பிராந்திய மேடையாகச் செயற்படுகிறது.

பெண்கள் மேற்கொள்ளும் பராமரிப்புச் சேவைகள் மற்றும் அவர்களின் பொருளாதார நிலைமை குறித்த பிரச்சினைகளை இதற்கு மேலும் புறக்கணிக்க இயலாது.

இது பொருளாதாரச் செயற்பாடுகளையும் சமூகத்தையும் நிலைநிறுத்துவதற்கு அவசியமான ஒரு அங்கமாகும். வீட்டுப் பணி, சிறுவர் மற்றும் முதியோர் பராமரிப்பு அல்லது சமூக ஒத்துழைப்பு என எதுவாக இருப்பினும், அவை முறைசார்ந்த மற்றும் முறைசாரா பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.

பராமரிப்புச் சேவை என்பது வெறும் பராமரிப்போடு மாத்திரம் நின்றுவிடுவதில்லை. குறிப்பாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் மூலமாக பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் இனங்காண வேண்டும்.

ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளானது பெண்கள் தொழில் சந்தையில் நுழைவதற்குப் பெரும் தடையாக இருக்கின்றது. உற்பத்தித்திறன் மிக்க உழைப்பு என்பதை ஊதியம் பெறும் பணிகளாக மாத்திரம் வரையறுத்தலாகாது.

அதேநேரம், பெண்கள் தொழில் சந்தையில் இணைவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

குடும்பத்தையும் சமூகத்தையும் கொண்டு நடத்துவதற்காக அவர்கள் ஊதியமின்றி மேற்கொள்ளும் பணிகள் மூலம் பொருளாதாரத்திற்குக் கிடைக்கும் பங்களிப்பை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அது பொருளாதாரத்தின் மிக முக்கியமான, அதேநேரம் இதுவரை உரிய மதிப்பு வழங்கப்படாத ஒரு துறையாகும்.

இலங்கையின் பராமரிப்புச் சேவைகள் குறித்துக் கவனம் செலுத்துகையில், பெண் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெற்ற போதிலும், குடும்பப் பொறுப்புகள் மற்றும் ஏனைய காரணிகளால் அவர்கள் தொழில் சந்தையிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முறைசாரா மற்றும் ஊதியமற்ற உழைப்பு ஆகிய இரண்டு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை வரையறுக்கும் விதம் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் .

தொழில் சந்தைப் பங்களிப்பு என்பது வெறும் உற்பத்தித்திறனை மதிப்பிடுவது மாத்திரமல்ல; அது வாய்ப்புகள், கௌரவம் மற்றும் உள்வாங்கப்படுதல் பற்றிய விடயமாகும்.

ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ உழைப்பை வழங்குதல், முறைசார்ந்த அல்லது முறைசாரா உழைப்பு என எதுவாக இருந்தாலும் அதனை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடலாகாது.

பராமரிப்புச் சேவை என்பது பொருளாதார ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, அது மனித மூலதனத்தைக் கட்டியெழுப்பும் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தனித்துவமான துறையாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக, ஊதியமற்ற பராமரிப்புச் சேவைகள் தொடர்பான தேசியக் கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இச்செயற்பாட்டின் மூலம், ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளை தேசிய வளர்ச்சிக்கான அத்தியாவசிய அங்கமாக அங்கீகரித்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுமையைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்தல், பராமரிப்புப் பொறுப்புகளை நியாயமான முறையில் பகிர்ந்தளித்தல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புச் சேவைகள், சமூக மற்றும் பொருளாதாரச் செயல்பாடுகளின் இன்றியமையாத பிரிவுகளாகும், அவை தொழிலாளர் சந்தைப் பங்கேற்பைச் சாத்தியமாக்கி, குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு ஆதரவளித்து, உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வலியுறுத்தியுள்ளது. தெற்காசியா முழுவதிலும் இப்பராமரிப்புச் சேவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை . தரமான பராமரிப்புச் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதே பாலின சமத்துவமின்மைக்கான காரணமாக அமைந்துள்ளன.

இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, ‘கௌரவமான பணியும் பராமரிப்புப் பொருளாதாரமும்’ தொடர்பான முன்மொழிவு ஒன்றினை ILO அங்கீகரித்துள்ளது.

பராமரிப்பைத் தொழில் சந்தையின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியாக இனங்கண்டு, உயர்ந்த தரத்திலான சேவைகளை வழங்குவதற்கும், பராமரிப்புப் பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

இந்த உரையாடல்கள் மூலமாக தெற்காசியா முழுவதிலும் பராமரிப்புச் சேவை அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் எனத் தாம் நம்புகிறோம் என்றார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்