தனுஷ் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் ‘#D56 ‘ திரைப்படத்தில் தனுஷ், பிரீத்தி முகுந்தன், வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, விஜய் கே குமார் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் ப்ரிமார்க் […]

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத்ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன், மகாலட்சுமி , ஷீலா ராஜ்குமார், கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். […]

“ஆறாத ரணம்; தீராத வலி!” – கரூர் கூட்ட நெரிசல் பலி முதலாமாண்டு நினைவேந்தல்; முதல்வர் விஜய் உருக்கமான பதிவு!

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கூட்ட நெரிசலும் பலியும்: கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தற்போதைய முதலமைச்சர் விஜய் மக்கள் மத்தியில் பேசினார். அவரைக் காணும் ஆவலில் மக்கள் முண்டியடித்ததால் […]

மூக்குத்தி அம்மன் 2 வெளியீடு எப்போது?

2020-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் வெளியீடு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி, கடந்த 2020-ஆம் ஆண்டு நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் நிறுவனத்தின் மூலம் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருந்தார். மக்களிடையே பேராதரவு பெற்று இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. மூக்குத்தி அம்மன் […]

முதலமைச்சரைச் சாடிய உதயநிதி ஸ்டாலினும் தவெக ஐடி விங்கின் பதிலடியும்!

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரைக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின் ஐடி விங்க் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்: தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துக் கொளத்துப்பாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “107 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளில் வெற்றிபெற்றவர்களைத் திருட்டுத்தனமாக இழுத்து இந்த அரசு அமைந்துள்ளது. முதுகில் குத்திய […]

“நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது; அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை!” – திருமாவளவன் அதிரடிப் பேச்சு!

சென்னை: யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை விமர்சிக்க ஒரு கும்பல் இருப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவின் அரசியல் தாக்கம்: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலில் விசிக ஏற்படுத்தியுள்ள தாக்கம் பல கட்சிகளின் நிலைப்பாடுகளை மாற்றியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் […]

“பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி!” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்!

மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆபாசப் பேச்சு அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். நிதானம் இல்லாத பேச்சு: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து உதயநிதி பேசியதற்குப் பதிலடி கொடுத்தார். “உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அவரது மனதில் இருப்பதை […]

தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை நீக்கத்தைக் கண்டித்து நாளை போராட்டம்!

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால் எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

தீலிபன் சிலை அகற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி முதல் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் பொறுப்பேற்கவேண்டும் – வேலன் சுவாமிகள்

தியாகதீபம் தீலிபன் ; சிலை அகற்றப்பட்ட செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டு;ம் என சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை பொலிஸாரால் கடந்த 12 நாட்களாக நாங்கள் நிறுவி வழிபட்ட சிலை எங்களுடைய தியாகதீபம் தீலிபன் அண்ணாவின் சிலை ஒரு அராஜகத்தனமாக அடாவடித்தனமாக அகற்றிவைக்கப்பட்டிருக்கின்றது. இதனை நாங்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம். தியாகதீபம் தீலிபன் அண்ணா […]

திருச்சியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீர் நிறுத்தம்

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து தினமும் லாரிகள் மூலம் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்தந்த கேஸ் ஏஜென்சிகளிடம் ஒப்படைப்பது வழக்கமாகும். இந்நிலையில், இத்தொழிற்சாலையிலிருந்து லாரியில் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு, விராலிமலை அருகே உள்ள பேரையூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கேஸ் ஏஜென்சிக்கு விநியோகத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு லாரி டிரைவர் மோகன், ஏஜென்சி உரிமையாளரிடம் சிலிண்டர் குறித்த விவரங்களை […]