திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன்

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன் தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலையை பலவந்தமாக அகற்றியதன்  மூலம் அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களினது மனங்களையும் புண்படுத்தியிருக்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தியாகதீபம் திலீபன் அண்ணாவினுடைய திருவுருவச் சிலை இன்றைய தினம் காலையிலே யாழ்ப்பாண பொலிசாரால் அகற்றப்பட்டிருக்கின்றது. பலவந்தமான முறையில் அகற்றப்பட்டிருக்கின்றது. அவர்கள் எங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் […]

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழு ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்துக் கலந்துரையாடல்

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழுவொன்று செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை பாராளுமன்றத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட வரிச்சலுகைத் திட்டமான ஜி.எஸ்.பி.பிளஸ் கட்டமைப்பின் கீழ் இலங்கையுடனான தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு, அந்தத் திட்டம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் வழங்கும் பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. ஐரோப்பிய […]

தியாகதீபம் தீலிபனின் சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளனர்