டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ரன்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலி தனது 303-வது இன்னிங்ஸில் 15,000 ரன்கள் என்ற இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 377-வது இன்னிங்ஸில் 15,000 ரன்களை எட்டியதே அதிவேக சாதனையாக இருந்தது. தற்போது சச்சினை விட 74 இன்னிங்ஸ்கள் குறைவாக எடுத்துக்கொண்டு, அதிவேகமாக 15,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

போட்டியில் 14,941 ரன்களுடன் களம் புகுந்த கோலி, 15,000 ரன்களை எட்ட 59 ரன்கள் தேவைப்பட்டன. நிதானமாக விளையாடிய அவர், அல்ஜாரி ஜோசப் வீசிய பந்தை மிட்விகெட் திசையில் பவுண்டரிக்கு விரட்டி 46 பந்துகளில் 59 ரன்களை எட்டி இந்த மைல்கல்லை அடைந்தார். இச்சாதனையைப் பூர்த்தி செய்தவுடன், தனது முன்மாதிரியான சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு கரங்களையும் உயர்த்தி, திருவனந்தபுரம் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொண்டார்.

போட்டியின் இறுதியில் அபாரமாக ஆடிய கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சுப்மன் கில்லின் அதிரடி சதம் (110 ரன்கள்) மற்றும் கோலியின் 55-வது ஒருநாள் சதத்தின் உதவியால், மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 296 ரன்கள் இலக்கை இந்தியா லாவகமாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், அவருக்கு அடுத்தபடியாக 15,000 ரன்களைக் கடந்த ஒரே வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை