பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை என்பது தேசிய மகளிர் நலன்புரி ஆய்வின் (National Women’s Wellbeing Survey) தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 

2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு அறிக்கையின்படி, துணையைக் கொண்டிருந்த பெண்களில் ஐந்து பேரில் இருவர் (39.8%) தமது வாழ்நாளில் உடல், பாலியல், உளவியல் அல்லது பொருளாதார ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன், ஐந்து பேரில் ஒருவர் (20.4%) நெருங்கிய துணையினால் உடல் மற்றும்/அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர்.

 

சமூக அவப்பெயர், பழிவாங்கல்கள் குறித்த அச்சம் மற்றும் தற்போதுள்ள உதவிச் சேவைகள் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு ஆகியனவே அவர்கள் எவ்வித உதவியையும் நாடாமைக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.

 

இந்த நிலைமைக்குத் தீர்வு காணும் முகமாக, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) உள்ளானவர்களுக்கு நீதிக்கான அணுகலை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

 

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA இலங்கை) மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் (FAGBV) ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளன.

 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்ரமசிங்க மற்றும் UNFPA இலங்கையின் உதவிப் பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணதுங்க ஆகியோர் இது தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

 

நவம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதல் டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் மனித உரிமைகள் தினம் வரை முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்றிட்டம், “#நீதிஎனதுஉரிமை (#JusticeIsMyRight) ஒன்றிணைந்து பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை நிறுத்துவோம்” எனும் தேசிய தொனிப்பொருளின் கீழ் வழிநடத்தப்படுகின்றது.

 

2026 நவம்பர் 25 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் (Race Course) இருந்து கொழும்பு மாநகர சபை வரை தேசிய நடைபேரணி ஒன்று நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து நீதியை நிலைநாட்டுவதற்கு உள்ள தடைகளை வெற்றிகொள்வது தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.

 

வன்முறைக்கு உள்ளானவர்களுக்கு உதவும் நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்காக ‘சேவை வழங்குநர்களின் தேசிய டிஜிட்டல் விபரத்திரட்டு (National Digital Directory of GBV Service Providers) அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

பொது இடங்களில் இடம்பெறும் பாலியல் தொல்லைகள் மற்றும் குடும்ப வன்முறைகளை அடையாளம் கண்டு, அதில் தலையிடுவதற்குச் சமூகத்தை ஊக்குவிக்கும் தொடர்பாடல் வேலைத்திட்டமும் இதன்போது ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

 

சட்ட மற்றும் கொள்கை ரீதியான சீர்திருத்தப் பரிந்துரைகள் ஒன்றிணைக்கப்பட்டு டிசம்பர் 12–13 ஆம் திகதிகளில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

 

அத்துடன், வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு உதவுவதற்காக 24 மணிநேரமும் செயற்படும் 1938 கட்டணமில்லா மகளிர் உதவிச் சேவை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் மற்றும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் நெறிமுறை ரீதியான செய்தி அறிக்கையிடலில் ஈடுபடுமாறு ஊடக நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை

dg

திருக்கோவில் சாகாமத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு?

November 23, 2026

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர்