நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் படைத்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், வடமேற்கு குயின்ஸில் உள்ள 12ஆவது மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கோன் டோவை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். இப்பகுதியில் வசிப்பவர்களில் சுமார் 50 சதவீதமானோர் அமெரிக்காவிற்கு வெளியே பிறந்தவர்களாவர்.

‘அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள்’ (DSA) அமைப்பு மற்றும் நியூயோர்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆகியோரின் ஆதரவுடன் களமிறங்கிய கவாஸ்; பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு, குறைந்த விலை வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கவாஸின் பெற்றோர் பாலஸ்தீனத்தில் நடந்த மக்கள் வெளியேற்றங்களின்போது தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள். அவரது தந்தை 1948ஆம் ஆண்டிலும், தாயார் 1967ஆம் ஆண்டிலும் வெளியேற்றப்பட்டனர். ஜோர்டானில் அண்டை வீட்டாராக வளர்ந்த அவர்கள், காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, 1990களில் தங்கள் கைக்குழந்தையான மகனுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்களுக்கு மூன்று மகள்கள் பிறந்தனர். நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாக, இரண்டு சகோதரிகளுக்கு இடையே அபெர் பிறந்தார்.

சிறுவயதில் தனது தந்தை குடிவரவுத் துறையால் தடுத்து வைக்கப்பட்ட சம்பவமே, தன்னைச் சமூகப் பணிகளிலும் அரசியலிலும் ஈடுபடத் தூண்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்கு நியூயோர்க் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் நிதியுதவி அளிப்பதைத் தடை செய்யும் ‘நாட் ஆன் அவர் டைம்!’ (Not on Our Dime!) சட்டமூலத்தை மீண்டும் செனட் சபையில் நிறைவேற்றுவதே எனது முதல் முன்னுரிமையாகும்” என அவர் தனது அடுத்த இலக்கு குறித்துத் தெரிவித்துள்ளார்.

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை

dg

திருக்கோவில் சாகாமத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு?

November 23, 2026

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகளை விசேட அதிரடிப்படையினர்