நாட்டின் பிரதான மீன்பிடித் துறைமுகங்களை புனரமைக்கத் திட்டம் ?

நாட்டின் பிரதான மீன் விற்பனை மையமான பேலியகொடை மீன் சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய, சுகாதாரமான மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். உலக மீனவர் தினத்தை முன்னிட்டு காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பேலியகொடை மீன் சந்தை மட்டுமன்றி, நாடளாவிய ரீதியில் காணப்படும் ஏனைய மீன் சந்தைகளையும் குடும்பத்தினர் மற்றும் சிறுவர்கள் எவ்வித […]

அரசாங்கம் ‘சுபோதினி’ அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்

ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட ‘சுபோதினி’ அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீகந்தநேசன் புயல்நேசன் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் சுகவீன விடுமுறைப் போராட்டத்திற்குத் தமது சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் இதன்போது குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புயல்நேசன், “சுபோதினி […]

பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்குமாறு 6 முக்கிய நிபந்தனைகள்!

பெருந்தோட்டங்களை மீண்டும் குத்தகைக்கு வழங்குமாறு கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கையை, புதிய நிபந்தனைகளுடன் அரசாங்கம் அணுக வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளைச் சுற்றியுள்ள 25 ஹெக்டேயர் காணிகள், கோவில்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நெடுங்குடியிருப்புகள் ஆகியவற்றைத் தவிர்த்தே குத்தகைக்கு வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். எதிர்கால வீடமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அக்காணிகளைப் பிரதேச செயலகங்களின் கீழ் கொண்டுவர வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் […]

முதல் மாவீரர் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி!

மாவீரர் வாரத்தின் முதலாவது நாள் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கரின் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறையில் உள்ள மாவீரர் சங்கர் அவர்களது வீட்டின் முன்பாக சுடரேற்றி மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் கப்டன் பண்டிதர் அவர்களின் தயார் மகேஸ்வரி அம்மா மாவீரர் நினைவு சுடரினை ஏற்றிவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மகிழடித்தீவில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்தாளர்கள் கௌரவிப்பு

தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்தாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் போதகர் லூக் அடிகளார் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் க.குககுமாரராசா, வெல்லாவெளி இணைப்பாளர் பா.குமாரசிங்கம் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர் […]

திருகோணமலை மாவட்ட மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்ட மாவீரர் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது. இந்நிகழ்வை திருகோணமலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மேளதாளங்களுடன் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி உறவுகளால் தீபச் சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு மாவீரர்களின் பெற்றோர்களுக்கும், உரித்துடடையவர்களுக்கும் மதிய போசனமும் வழங்கி வைக்கப்பட்டது.