வலுத்த எதிர்ப்பு: சில மணி நேரத்தில் அரசாணையை ரத்து செய்த த.வெ.க

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என த.வெ.க அரசு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பொதுத் துறையின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்துள்ளதாக த.வெ.க அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல், உளவு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு […]

75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் – இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

  இந்தியாவின் நலனுக்காக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான இருப்பை தக்க வைப்பதற்கு தமிழ் மக்களின் சுயாட்சியை அங்கீகரித்து, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. எவ்விதமாக வெளிப்படையான கலந்துரையாடல்களுமின்றியே அரசாங்கம் இவ்வாறான சட்டமூலங்களை இயற்றுகிறது.இது சட்டமானால் மனித உரிமைகள்,ஜனநாயகம் முழுமையாக இல்லாதொழியும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து வினவிய போது […]

இலங்கையின் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் இரகசிய நிழல் மாஃபியா

  இறுதி ஈழப் போர் முடிந்ததோடு இலங்கை இராணுவத்திற்காக சீனா கொண்டு வந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் எஞ்சியிருந்தன. அதற்குப் பிறகு, இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதோ அல்லது அகற்றுவதோ சரியாக நடக்கவில்லை என இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், “சீன அரசு, “உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள், இனி எங்களிடம் கேட்க வேண்டாம்” என்று […]

வனிதா சேனாதிராஜா மரணத்தில் தொடரும் சந்தேகங்கள்: காவல்துறை விசாரணை தீவிரம்

  வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், சமூக, கலாசார மற்றும் அரசியல் செயல்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதுடன், இது குறித்து முறையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா கோவில் குளம் இந்துக்கல்லூரியின் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றியவரும், வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையுடன் இணைந்து செயல்பட்டவருமான வனிதா, பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் செப்டம்பர் […]

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் வெவ்வேறு சிறை அறைகளில்!

  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளும் வெவ்வேறு சிறை அறைகளில் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அண்மையில் 200 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த 15 கைதிகளின் செயற்பாடுகள் குறித்து சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கைதிகள் சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை உட்கொள்வதுடன், ஏனைய கைதிகளுடன் சுமுகமாக உரையாடுவதாகவும் தெரியவந்துள்ளது. விசேட […]

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன்

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன் தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலையை பலவந்தமாக அகற்றியதன்  மூலம் அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களினது மனங்களையும் புண்படுத்தியிருக்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தியாகதீபம் திலீபன் அண்ணாவினுடைய திருவுருவச் சிலை இன்றைய தினம் காலையிலே யாழ்ப்பாண பொலிசாரால் அகற்றப்பட்டிருக்கின்றது. பலவந்தமான முறையில் அகற்றப்பட்டிருக்கின்றது. அவர்கள் எங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் […]

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழு ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்துக் கலந்துரையாடல்

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழுவொன்று செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை பாராளுமன்றத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட வரிச்சலுகைத் திட்டமான ஜி.எஸ்.பி.பிளஸ் கட்டமைப்பின் கீழ் இலங்கையுடனான தொடர்ச்சியான ஈடுபாட்டை பாராட்டிய ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு, அந்தத் திட்டம் நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் சர்வதேச தரநிலைகளை மேம்படுத்துவதற்கும் வழங்கும் பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது. ஐரோப்பிய […]

தியாகதீபம் தீலிபனின் சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளனர்