இலங்கையின் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் இரகசிய நிழல் மாஃபியா

 

இறுதி ஈழப் போர் முடிந்ததோடு இலங்கை இராணுவத்திற்காக சீனா கொண்டு வந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் எஞ்சியிருந்தன. அதற்குப் பிறகு, இவற்றை வெளிநாடுகளுக்கு விற்பதோ அல்லது அகற்றுவதோ சரியாக நடக்கவில்லை என இலங்கை விமானப்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வலைதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“சீன அரசு, “உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள், இனி எங்களிடம் கேட்க வேண்டாம்” என்று ஆயுதங்கள் தொடர்பில் கூறிவிட்டது. அதன் பிறகு சீன அரசுக்குச் செலுத்த வேண்டிய பணமும் செலுத்தப்பட்டது.

கொழும்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வெடிமருந்துகள்
ஆனால் வெடிமருந்துகள் கொழும்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. கடந்த அரசாங்க காலங்களில் இவற்றை மோசடியாக வெளிநாடுகளுக்கு விற்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தடைப்பட்டதோடு சில வெடிப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக புலனாய்வு தகவல்களில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்…இலங்கையில் இப்போது மலாவி (Malawi) நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆயுதங்களை விற்கும் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று வருகிறது.

இந்த கதை பல வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்கிறது. யுத்த காலத்தில் ‘பொலி டெக்னொலஜிஸ்’ (Poly Technologies) என்ற சீன நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஆயுதங்கள் வாங்கப்பட்டன.

குறிப்பாக வெடிமருந்துகள் (Ammunition) கோடிக்கணக்கில் தேவைப்பட்டன. இந்த ‘பொலி டெக்னொலஜிஸ்’ என்பது சீன அரசின் ஒரு நிறுவனமாகும்.

அந்த நிறுவனம் பெருமளவிலான வெடிமருந்துகளை இலங்கைக்குள் கொண்டுவந்து சேமித்து வைத்திருந்தது. பீரங்கி வெடிமருந்துகள் (Artillery ammo) மில்லியன் கணக்கில் தேவைப்படும் போது, அவர்களிடம் இருக்கும் பாரிய சேமிப்பிலிருந்து கொடுக்கப்பட்டது.

மீண்டும் ஒரு பாரிய சேமிப்பு
அதற்குரிய பணத்தை இலங்கை அரசு செலுத்தும். மீண்டும் ஒரு பாரிய சேமிப்பு அந்தப் நிறுவனத்திடம் எஞ்சியிருக்கும்.அந்தப் பொருட்கள் இலங்கையிலேயே சேமித்து வைக்கப்பட்டிருந்தன.சீனாவில் இருந்து உடனுக்கு உடன் இறக்குமதி செய்யப்படுவதில்லை.

தேவைப்படும் போது வழங்க ஆயத்தமாக இருந்தது. கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்திலும், அதற்கு முன்னும் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் இதை விற்க முயன்றார்கள்.

இந்த ஆயுதங்களை ஒரு போர்ச் சூழல் உள்ள நாட்டுக்கே விற்க முடியும்? போரை எதிர்பார்க்கும் ஒரு நாட்டுக்குத்தான் விற்க முடியும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் உக்ரைனுக்கு அனுப்ப முயன்றார்கள்.

இது தெரியவந்ததும் ரஷ்யா தலையிட்டு, தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு மத்திய கிழக்கு ஹூதிகளுக்கு (Houthis) விற்க முயன்றார்கள். அமெரிக்கா இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்தியது.

ஆனால் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி, போலி இறுதிப் பயனர் சான்றிதழ்களை (EUC) தயாரித்து மோசடி செய்தார்கள்.

தனிதன்மையான கொடுக்கல் வாங்கல்
ஏனெனில், ஆயுதக் கொடுக்கல் வாங்கலை எவராலும் நினைத்தபடி செய்ய முடியாது. பணம் இருக்கிறது என்பதற்காக வாங்க முடியாது.

அதற்குத் தனிதன்மையான கொடுக்கல் வாங்கல் தேவை. “உங்களிடம் வாங்கும் ஆயுதங்களை உங்களுக்கு எதிராகவும், அல்லது உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் பயன்படுத்த மாட்டோம்” என்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

போலி (EUC) சான்றிதழ்களைத் தயாரித்து விற்கும் இந்த முயற்சி கமல் குணரத்னவின் காலத்தில் மூன்று முறை நடந்துள்ளது. இப்போது மலாவிக்கு விற்பனை செய்வதற்கு அமைச்சரவை (Cabinet) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மலாவி என்ற நாட்டில் முறையான இராணுவம் கூட இல்லை. இராணுவத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஓய்வுபெற்றவர்கள். அதிலும் பாதிப் பேர் தீவிரமாக இயங்குவதில்லை.

இது முறையாக நடப்பதாக இருந்தால், மலாவிக்கான தூதரகம் இல்லை, நைரோபியில் தான் உள்ளது. நைரோபியில் உள்ள தூதரக அதிகாரியின் இராஜதந்திர ஆவணத்தில் மலாவி பிரதமர், பாதுகாப்புச் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சர் (EUC) சான்றிதழை இலங்கை ஜனாதிபதிக்கோ அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கோ அனுப்ப வேண்டும்.

ஆனால் அரசாங்கத்திற்கு தெரியாது.மலாவியில் இவ்வளவு பாரிய பீரங்கி வெடிமருந்துகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை.மலாவியிலிருந்து இது வேறு எங்கோ கைமாற்றப்படுகிறது.

இதற்கு பின்னால்’குமார ராஜபக்ச’ என்ற, யுத்த காலம் முழுதும் சம்பாதித்த ஒரு முகவர் தான் செயற்பட்டு வருகிறார்” என கூறியுள்ளார்.

sulo

‘சிக்மா’ – ‘சுலோச்சனா’ பாடல் வெளியீடு!

September 27, 2026

நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுலோச்சனா’ எனும் பாடலும், பாடலுக்கான

maalai-malar_2026-09-27_cbqi3z4q_Untitled-design-26

“ஆறாத ரணம்; தீராத வலி!” – கரூர் கூட்ட நெரிசல் பலி முதலாமாண்டு நினைவேந்தல்; முதல்வர் விஜய் உருக்கமான பதிவு!

September 27, 2026

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்

moo

மூக்குத்தி அம்மன் 2 வெளியீடு எப்போது?

September 27, 2026

2020-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் வெளியீடு

dailythanthi_2026-05-10_tanja63f_vjierewrewewrwrw

முதலமைச்சரைச் சாடிய உதயநிதி ஸ்டாலினும் தவெக ஐடி விங்கின் பதிலடியும்!

September 27, 2026

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரைக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின்

images

“நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது; அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை!” – திருமாவளவன் அதிரடிப் பேச்சு!

September 27, 2026

சென்னை: யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை விமர்சிக்க ஒரு கும்பல்

1200-675-27731240-thumbnail-16x9-nirmal-aspera

“பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி!” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்!

September 27, 2026

மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆபாசப் பேச்சு அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல்

825267965_122150357097199398_1955019924787694849_n

தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை நீக்கத்தைக் கண்டித்து நாளை போராட்டம்!

September 27, 2026

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால்

826047743_2538007303334500_2249341759957978704_n

தீலிபன் சிலை அகற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி முதல் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் பொறுப்பேற்கவேண்டும் – வேலன் சுவாமிகள்

September 27, 2026

தியாகதீபம் தீலிபன் ; சிலை அகற்றப்பட்ட செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை

IMG_8606

திருச்சியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீர் நிறுத்தம்

September 27, 2026

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து தினமும் லாரிகள் மூலம் கேஸ்

IMG_8605

வலுத்த எதிர்ப்பு: சில மணி நேரத்தில் அரசாணையை ரத்து செய்த த.வெ.க

September 27, 2026

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என த.வெ.க

IMG_8604

75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் – இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

September 27, 2026

இந்தியாவின் நலனுக்காக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான

IMG_8603

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை

September 27, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான