திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன்

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன்
தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலையை பலவந்தமாக அகற்றியதன்  மூலம் அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களினது மனங்களையும் புண்படுத்தியிருக்கின்றது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தியாகதீபம் திலீபன் அண்ணாவினுடைய திருவுருவச் சிலை இன்றைய தினம் காலையிலே யாழ்ப்பாண பொலிசாரால் அகற்றப்பட்டிருக்கின்றது. பலவந்தமான முறையில் அகற்றப்பட்டிருக்கின்றது. அவர்கள் எங்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் வழங்காமல் திடீரென அவர்களுடைய வாகனங்களிலே வந்து 15க்கும் மேற்பட்ட பொலிசார் சப்பாத்துக் கால்களோடு மேலே சென்று அந்த சிலை பொருத்தப்பட்டிருந்த அந்த பொருத்தல்கள் எல்லாவற்றையும் உடைத்து அதனை பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளதாக எங்களுடைய ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இங்கே நான் வந்து பார்த்தபொழுது அந்தச் சிலை காணப்படவில்லை. இந்தச் சிலை திலீபன் அண்ணாவினுடைய திருவுருவச் சிலை பொலிசாரால் பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டபோது நாங்கள் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். அன்றைய அரசாங்கத்தினுடைய நினைவொளிப் பிரச்சாரத்தை வெளிப்படுத்தி, அனுர குமார திசாநாயக்க தமிழ் மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காக தன்னுடைய முகவர்கள் ஊடாக தேர்தல்கால பகுதியிலே வெளிப்படையாகச் செய்த பிரச்சாரம், “தாங்கள் இந்த நினைவேந்தல்களை அனுமதிப்போம், சிலைகளை நிறுவுவோம்” என்று சொல்லி அவருடைய சார்பிலே போட்டியிட்டவர்கள் சொல்லியிருந்தார்கள். இந்த சந்திரசேகரன், ரஜீவன், இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா போன்றவர்கள் இந்த மாவீரர்களை நினைவுகூருவதற்கான சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்று பல்வேறுபட்ட மேடைகளிலே மக்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு கூறி மக்களை ஏமாற்றி கணிசமான வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட பிற்பாடு, இன்று ஒவ்வொன்றாக தமிழ் மக்களுடைய குரல்வளையை நசுக்குகின்ற செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டபாய ராஜபக்சவுக்கும் இடையிலே, அவர்களைப் போன்றே அனுரவக்கும் இடையிலும் அவருடைய தமிழர்களுக்கு எதிரான அந்த இனவெறி மனப்பான்மை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்பதைத் தான் இந்தச் செயல்பாட்டின் ஊடாக நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இந்தத் திருவுருவச் சிலையை அகற்றியதன் மூலம் ஒட்டுமொத்தமான தமிழ் மக்களையும் அனுர அரசாங்கம் அவமதித்திருக்கிறது, வெளிப்படுத்தியிருக்கிறது, தமிழ் மக்களுடைய மனங்களை புண்படுத்தியிருக்கிறது. இவ்வாறான செயல்பாடுகள் மூலம் ஒருபொழுதும் அனுர குமார திசாநாயக்கவினால் தமிழ்-சிங்கள மக்களுக்கு இடையிலே ஒரு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதனை நாங்கள் இந்த இடத்திலே பொறுப்போடு நாங்கள் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம். அவர் ஒரு கோழைத்தனமான ஒரு ஆட்சியாளராகவே நான் கருதுகின்றேன். அவர் தான் ஒருவிதமாக, அதாவது நாட்டிலே ஏற்பட்ட கோட்டபாய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச போன்றவர்கள் நாட்டைக் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல் அவர்கள் சீனா சார்பாகச் சென்றதனால் அவர்களுடைய ஆட்சி கவிழ்க்கப்படுகின்ற நிலைமை மேற்கத்திய நாடுகளினாலே உருவாக்கப்பட்டிருந்தது, அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை அதிர்ஷ்டவசமாகப் பெற்றுக் கொண்ட கோழைத்தனமான ஆட்சியாளர் அனுர குமார திசாநாயக்க தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ராஜபக்சக்கள் போன்றே வந்து இனவெறியைத் தமிழர்களுக்கு எதிராகக் கைக்கொள்வதற்கு அவர் முயற்சி செய்கின்ற இந்த கோழைத்தனமான செயல்பாட்டை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

03:00 – 03:36

இது எங்களுடைய இரத்தத்தோடும் உயிரோடும் உணர்வோடும் சம்பந்தப்பட்ட விடயத்திலே அவர் விளையாடுகின்றார். இது ஒட்டுமொத்த மக்களையும், உலகம் பூராகவும் வாழுகின்ற தமிழர்களைக் கோபப்படுத்துகின்ற ஒரு விடயத்தை அவர் திட்டமிட்டே செய்திருக்கின்றார். இன நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்காகவே அதனைச் செய்திருக்கின்றார். வெதுக்குநாறி மலையிலே செய்யப்பட்ட ஆய்வுகளின்படி அது பண்டைய தமிழர்களுக்குச் சொந்தமான, கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்குப் பழமையான தமிழர்களுக்குச் சொந்தமான வரலாறு என்று வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றபொழுதும் கூட, அங்கே பொய்யாக, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொய்யாக எழுதுகின்ற கடிதங்களை வைத்துக்கொண்டு அங்கே புத்த சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதியளிக்கின்ற அரசாங்கம், இங்கே தமிழர்களுடைய தமிழர்களுக்கு இருக்கக்கூடிய சட்டபூர்வமான நினைவேந்தல் உரிமைகளை முற்றாக மறுத்து தமிழர்களைக் கோபப்படுத்தி வன்முறைக்குள் தள்ளுவதற்கு அனுர குமார திசாநாயக்க முயலுகின்றார். இந்தச் செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அனுர குமார திசாநாயக்க நேரடியாக இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அதேநேரத்திலே இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் சி.வி.கே. சிவஞானம் இருக்கிறார் என்கின்ற ஒரு வலுவான குற்றச்சாட்டையும் நாங்கள் முன்வைக்கின்றோம். கடந்த 19ஆம் திகதி, 18ஆம் திகதி இங்கே இந்த ஒலிபெருக்கிகள் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அதற்காகச் சட்டபூர்வமாக விண்ணப்பிப்பதற்காக நாங்கள் இந்த நில உரிமையை, கடிதத்தை, அதனைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தை மேயரிடம் கேட்டபொழுது, மேயர் எங்களுடைய உறுப்பினர்கள் ஊடாக தங்களுடைய கட்சி தலைமை இந்த விடயத்திலே தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்று எச்சரித்திருப்பதாக ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதன் பிரகாரம் நாங்கள் சி.வி.கே. சிவஞானம் ஐயாவோடு தொடர்பு கொண்டு பேசியபொழுது, அவர் என்னோடு மிகக் காட்டமாக கதைத்திருந்தார்: “நீங்கள் யாரைக் கேட்டு இந்தச் சிலையை வைத்தீர்கள்? 26ஆம் திகதியோடு இந்தச் சிலை அகற்றப்படவில்லை என்றால் நானே இந்தச் சிலையை எடுப்பேன்” என்று சொல்லி எனக்குச் சொல்லியிருந்தார். நான் எதிர்பார்க்கவில்லை இவர் இவ்வளவுக்கு ஒரு கீழ் தரமான செயல்பாட்டைச் செய்வார் என்று. நிச்சயமாக பொலிசாரை ஏவி, பொலிசாருடைய கைக்கூலிகளாக தமிழரசுக்கட்சி செயல்பட்டிருக்கிறது என்பதையும் இந்த இடத்திலே நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழரசுக்கட்சி இந்தச் செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழரசுக்கட்சியும் அனுர அரசுடன் சேர்ந்துதான் இந்த கூட்டு நாடகத்தை ஆடியிருக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்திலே நான் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்

th st

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன்

September 27, 2026

திலீபனின் சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் மனங்களை அனுர அரசு காயப்படுத்தியுள்ளது – கஜேந்திரன் தியாகதீபம் தீலிபனின் திருவுருவச்சிலையை பலவந்தமாக

gps

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழு ஜி.எஸ்.பி. பிளஸ் குறித்துக் கலந்துரையாடல்

September 27, 2026

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் குழுவொன்று செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கை பாராளுமன்றத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்

4

தியாகதீபம் தீலிபனின் சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர்

September 27, 2026

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளனர்

images

“தாராபுரத்தில் தவெக – அதிமுகவினர் இடையே மோதலா?” – பிரச்சாரத்தைத் திசைதிருப்பச் சதி என அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக மற்றும் அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து

7

“சத்தியபாமாவா இல்லை பெட்டி பாமாவா? சட்டமன்றமா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டா?” – தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் சரமாரி விளாசல்!

September 26, 2026

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக அரசின் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி

8557447-aadhavarjuna

“திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை இல்லை!” – எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சரமாரி குற்றச்சாட்டு!

September 26, 2026

சென்னை: திமுகவின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளதாக

IMG_8562

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

September 26, 2026

எல் நினோ நிலைமை வலுவடைந்து வருவதால், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல்

IMG_8561

அதிகரிக்கும் டெங்கு!

September 26, 2026

நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை

IMG_8560

தங்காலையில் 2.8 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது !

September 26, 2026

தங்காலை, குடாவெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 2.8 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

IMG_8559

கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு ஞாயிற்றுக் கிழமை முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

September 26, 2026

தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர்

IMG_8558

திறந்தவெளிச் சந்தை மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம்

September 26, 2026

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL), திறந்தவெளிச் சந்தை மூலம் மின்சாரம் பெறும் உயர் அழுத்த நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 63

14

“அத்தனையும் பச்சைப் பொய்; முதலமைச்சரின் ஆடம்பர அறைக்கு 10 கோடி செலவு!” – முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி பதிலடி!

September 26, 2026

மதுராந்தகம்: ஜெம் வீரமணி கைது விவகாரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் விஜய் கூறியது அனைத்தும் பச்சைப் பொய்