திருப்பூர்:
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரைக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின் ஐடி விங்க் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்:
தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துக் கொளத்துப்பாளையம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “107 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளில் வெற்றிபெற்றவர்களைத் திருட்டுத்தனமாக இழுத்து இந்த அரசு அமைந்துள்ளது. முதுகில் குத்திய துரோகிகளை மக்கள் மறக்கமாட்டார்கள்” எனச் சாடினார்.
எம்எல்ஏக்கள் பேரமும் வழக்கும்:
தொடர்ந்து விமர்சித்த அவர், “முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வீட்டிற்கும் நேரில் சென்று சோபா டெலிவரி செய்தார். திமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் வழக்குப் போடுவதும், அதிமுக எம்எல்ஏக்களைப் பார்த்தால் பெட்டிக் கொடுப்பதும், அதை அவர்கள் வாங்குவதும்தான் இந்த ஆட்சியின் வாடிக்கை” எனக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
தவெக ஐடி விங்க் பதிலடி:
இதற்குத் தவெக ஐடி விங்க் தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது. “பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க நேரமில்லை. மேடை கிடைத்துவிட்டால் கொள்கை, சாதனை பற்றிப் பேசத் தெரியாமல், கொச்சையாக, நாலாந்தரமாகப் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை. குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகத்தை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். இந்த ஆபாசப் பேச்சுகளுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!\ என்று தவெக தரப்பில் ஆவேசமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#UdhayanidhiStalin #CMVijay #TVKITWing #DMK #TNPolitics #Dharapuram #ByElection2026 #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive