இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர். காலியானதாக அறிவிக்கப்பட்ட திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய […]
தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதனால் இன்று இரவு முதல் எதிர்வரும் 06.08.2026 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தற்போது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 06.08.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. […]
யார் என்ன சொன்னாலும் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!

தருமபுரி: காவிரி பிரச்சனைக்காக, யார் என்ன சொன்னாலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் கட்டாயம் கர்நாடகா செல்ல வேண்டும் எனத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய பிரேமலதா, “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் இணைந்து மண்சோறு சாப்பிட்ட பெருமை தேமுதிகவை மட்டுமே சாரும். காவிரி நடுவர் மன்ற […]
மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார்: அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்க குற்றச்சாட்டு!

சென்னை: காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் சொல்வதைத்தான் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்கிறார் எனத் தமிழக அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டி.கே.சிவக்குமாருக்கும் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கும் கட்சியைத் தாண்டிய நல்ல உறவு இருப்பதாகக் கூறினார். இதனால் திமுக என்ன சொல்கிறதோ அதைத்தான் டி.கே.சிவக்குமார் செய்கிறார் என்றும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என அவர் பல வகைகளில் விரும்புவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை சொல்வதைக் கேட்பதைவிட […]
மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: அன்புமணி ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தவறான நிலைப்பாடுகளை எடுத்து கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்குச் சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரைத் திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் […]
“நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்” – அமைச்சர் கீர்த்தனா நெகிழ்ச்சி!

சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாகச் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அண்மையில் டெல்லியில் நடந்த காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவைக் காவிரி மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது. இருப்பினும், கர்நாடக அரசு போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க மறுத்து வந்தது. […]
டெங்கு; 62 பேர் பலி – 86,000 நோயாளர்கள் பதிவு!

வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86,000 ஆகப் பதிவாகியுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இதுவரை இல்லாதவாறு அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,980 ஆக பதிவாகியுள்ளது. இதனிடையே, ஓகஸ்ட் மாதத்தில் கடந்துசென்ற இரு நாட்களில் 646 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா […]
36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. […]
காவிரி உரிமை விவகாரத்தில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

சென்னை: காவிரி நீர் உரிமை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேறுபாடின்றி ஒன்றாக நிற்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி நதிநீர் உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க, புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக […]
கடல் பகுதியில் மாயமான இரு மீனவர்களில் ஒருவர் பலி

நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல்போயிருந்ததாகக் கூறப்படும் இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. அனர்த்தத்திற்குள்ளான மற்றைய மீனவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்ததையடுத்து மீட்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (01) பிற்பகல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்டுச் சென்ற டிங்கி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளமை முதன்முதலில் வேறொரு மீன்பிடிப் படகு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்தது. எவ்வாறாயினும், இச்சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, […]