மாணவிகளுக்குத் தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது

டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்தமை மற்றும் தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறிப் பயணித்தமை தொடர்பாகப் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி […]

கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை கடற்பயணம் செய்ய வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம், கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (2)மாலை விடுத்துள்ள அறிக்கையொன்றில், இந்த எச்சரிக்கை நாளை (3) பி.ப. 8.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது நாளை அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளிலுள்ள கடல் அவ்வப்போது […]

நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது மஹர சிறைச்சாலை பதற்றம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையானது, நீர்கொழும்பு சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று (02) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இதேவேளை, சிறைச்சாலைகளுக்குள் இவ்வாறான பதற்ற நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு […]

நான் ஏற்கனவே சிறையை பார்த்தவன்: தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி பகிரங்க சவால்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரைப் பேரம் பேச முயன்றதாகப் பதியப்பட்ட வழக்கில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி நிபந்தனை கையெழுத்திட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்குக் கேட்டுத் தான் கடிதம் எழுதியிருந்ததாகவும், வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததாலேயே அவகாசம் கேட்டிருந்ததாகவும் விளக்கமளித்தார். “அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் […]

வீதி விதிமீறல்களைப் பிடிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்

வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த புதிய கண்காணிப்பு நடைமுறையின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் போது தொலைபேசியில் பேசுவது […]

வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழப்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (1) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 18 வயதுடைய சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வீதி 198 ஆவது மைல்கல் வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வீதி 198 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று பாதசாரி மீது மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 52 வயதுடைய ஓமந்தை பகுதியைச் சேர்ந்த […]

நீட் எதிர்ப்பு போராட்டம்: மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

சென்னை: நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய தமிழக மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், முறைகேடு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்த சுமார் 20 மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியில் தொடர் […]

22ஆவது திருத்தத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் ஊடாக சகல நீதிமன்றங்களின் நீதிபதிகள் சேவையில் இருந்து ஓய்வுப்பெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கிகாரத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. இதற்கமைய அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்டவரைவுக்கான ஆவணங்கள் சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார முன்வைத்த விசேட அமைச்சரவை யோசனைக்கு […]

மொஸ்கோ உணவகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு: பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு; 21 பேர் காயம்!

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவின் மையப்பகுதியில் உள்ள சொகுசு உணவகம் ஒன்றிற்கு அருகே சனிக்கிழமை (01) மாலை பெண் ஒருவர் கொண்டு சென்ற வெடிகுண்டு வெடித்ததில் 03 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 21 பேர் காயமடைந்துள்ளனர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவின் குட்ரின்க்ஸ்காயா சதுக்கத்தில் உள்ள ஸ்டாலின் காலத்து உயரமான கட்டடத்தில் இயங்கும் இத்தாலிய உணவகத்திற்கு வெளியே அந்நாட்டுநேரப்படி இரவு 8:00 மணிக்குச் சற்று முன்பாக இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத பெண் […]

தமிழர்களுக்கு ராஜபக்‌ஷாக்கள் எதைச் செய்தார்களோ அதையே நடைமுறை அரசாங்கமும் செய்கின்றது – தவிசாளர் நிரோஷ்

ராஜபக்‌ஷாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் முதல் நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தொவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை ஏற்க […]