தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் தளம்பல் நிலை ஒன்று உருவாகியுள்ளது.

இதனால் இன்று இரவு முதல் எதிர்வரும் 06.08.2026 வரையான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில பகுதிகளுக்கு சற்று மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திற்கு சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தற்போது மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 06.08.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருவதாலும், பல பகுதிகளிலும் மண் நிரம்புநிலையை எட்டியுள்ளதனாலும் இம்மாகாணங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாயம் உள்ளதனால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்கள் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

மத்திய பசிபிக் பெருங்கடலில் மிக வலுவான எல்நினோ உருவாகிக் கொண்டுள்ளது. இன்றைய தினம் (02.08.2026) நினோ 3.4 பிராந்தியத்தில் வெப்பநிலை 2. 4 பாகை செல்சியஸ் அதிகரித்துள்ளது.

எல்நினோவின் தொலை இணைவு வடமேற்கு இந்து சமுத்திரப் பகுதியில் ஆப்பிரிக்காவுக்கு கிழக்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அது இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதி நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் (IOD) மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இன்று (02.08.2026) இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண்+0.66 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் எதிர்பார்த்ததற்கு மாறாக எல்நினோவின் உச்சம் முன்கூட்டியே அதாவது செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கும் என்பதோடு எல்நினோவின் உச்சம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எதிர்வரும் 2027 ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்நினோவின் காரணமான சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பும் இந்து சமுத்திர வெப்பச்சுட்டெணின் நேர்மறை(Positive) மற்றும் எதிர்மறை (Negative) மாற்றங்களும் இலஙகைக்கு இரண்டு வேறுபட்ட தீவிர வானிலைத் தோற்றப்பாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

1. செப்டெம்பரின் இறுதிப்பகுதி வரை வெப்ப அதிகரிப்பு காணப்படும். அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம் மற்றும் மிகக்குறைந்த மழை வீழ்ச்சி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளுக்கு பெரும் நீர்த் தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடும்.

2. ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக அதிக தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இம்முறை இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ்ப் பருவக்காற்று காலப்பகுதிகளில் குறைந்தது 06 தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவற்றில் இரண்டு தாழமுக்கங்கள் புயல்களாக உருவாகும் வாய்ப்புள்ளன. ( இது ஒரு நீண்ட கால முன்னறிவிப்பு என்பதனால் இதில் மாற்றங்கள் நிகழக் கூடும்)

3. எனவே ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகம் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 மி.மீ. இனை விட அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

4. ஆனால் தாழமுக்க செயற்பாட்டினாலேயே இம்மழை கிடைக்கும் என்பதனால் குறைந்த மழை நாட்களில் அதிக மழை கிடைக்கும். இதனால் வெள்ள அனர்த்தங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே நாம்….

1. அதிக வெப்பநிலை, அதிக ஆவியாக்கம், மற்றும் குறைவான மழையினால் ஏற்படக்கூடிய மிக வரண்ட வானிலை மற்றும் வரட்சி,

2. தாழமுக்கங்கள்/ புயல்கள், குறுகிய நாட்களில் கிடைக்கும் கனமழை, காரணமாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள்

என இரண்டு விடயங்களுக்கும் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும்.

குறிப்பாக ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக வங்காள விரிகுடாவில் இந்து சமுத்திரத்தின் சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் என்ற அளவில் காணப்படுவதுண்டு. இது அதிகரிக்கும் போது தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகுவதுண்டு.

கடந்த 2025, நவம்பர் மாதம் 26ம் திகதி இந்து சமுத்திர வெப்பநிலை ( இலங்கைக்கு தெற்காக) 29.4 பாகை என்ற அளவில் இருந்தமையே ‘டிட்வா’ புயல் உருவாக காரணம்.

ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக இந்து சமுத்திர வெப்பநிலை 30 பாகை செல்சியஸ் இனை விடவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே இது தொடர்பாக நாம் அவதானமாக இருப்பது அவசியம்.

குறிப்பு: இது இன்றைய நிலையில் பல்வேறு மாதிரிகளின் பொதுப்பார்வை அடிப்படையிலான கணிப்பே… இதில் மாற்றங்கள் நிகழக் கூடும் என்பதனைக் கருத்தில் கொள்க.

 

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை

1291252

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? – ‘துக்ளக் தர்பார்’ முடிவைக் கைவிடச் சீமான் கடும் கண்டனம்!

September 12, 2026

சென்னை: ரூ. 1,200 கோடியில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட

solomon-pappaiah

பட்டிமன்ற பிதாமகனின் சகாப்தம் நிறைவு: முழு அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!

September 12, 2026

மதுரை: மறைந்த மூத்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் (90) உடல், மதுரை தத்தனேரி மின்

minister-vinoth (1)

ஆய்வுக் கூட்டத்துக்குச் செல்லும் வழியில் மனிதநேயம்: விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் வினோத்!

September 12, 2026

கும்பகோணம்: கும்பகோணம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவர்களுக்கு, அவ்வழியாகச் சென்ற

9712_1_9_2026_12_31_11_2__DSC4468

திருச்சி முக்கியக் கோயில்களில் செல்போன் பாதுகாப்புக்கான கட்டணம் ரத்து: பக்தர்களுக்கு இலவச வசதி!

September 12, 2026

திருச்சி: திருச்சியில் உள்ள 5 பிரதான கோயில்களில் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறை