இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் செம்மணியில் அடையாளம்…

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணியின் போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 211 மற்றும் 220 ஆகிய இலக்கங்களுடைய மனித எலும்புக்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டு, அடையாளமிடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதைகுழியின் வடமேற்குப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் […]
சிறுவர்கள் காணாமல் போன முதலாம் ஆண்டு நிறைவு: ‘உண்மைத் தகவல்களை’ வழங்குமாறு ஆர்.சி.எம்.பி (RCMP) கோரிக்கை

நோவா ஸ்கோடியாவில் இரண்டு சிறுவர்கள் காணாமல் போய் ஒரு ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், அது குறித்து “உண்மை மற்றும் ஆதாரம் சார்ந்த தகவல்களை” வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். லில்லி (Lilly – 6 வயது) மற்றும் ஜாக் சல்லிவன் (Jack Sullivan – 4 வயது) ஆகிய இரு உடன்பிறப்புகளும் காணாமல் போனமை குறித்து ஆர்.சி.எம்.பி (RCMP) தொடர்ச்சியான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. கனடா முழுவதிலுமுள்ள ஆர்.சி.எம்.பி பிரிவுகள், காணாமல் போன […]
சட்பரியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்: பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் எச்சரிக்கை

கிரேட்டர் சட்பரி (Greater Sudbury) பகுதியில் பல பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டு வரும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். கிரேட்டர் சட்பரி பொலிஸ் சேவையின் தகவல்படி, 43 வயதான மெத்யூ பிரான்சிஸ் (Matthew Francis) என்பவர் இரண்டு பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டு வருகிறார். இவர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாலியல் வன்புணர்வு, கொலை மிரட்டல் அல்லது உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான துன்புறுத்தல் (Criminal harassment) உள்ளிட்ட […]
கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான ஆஸ்திரேலியப் பெண்ணைத் தேடும் பணிகள் தீவிரம்

ஏப்ரல் 29, 2026 – கேப் பிரெட்டன் ஹைலேண்ட்ஸ் தேசிய பூங்காவில் மாயமான 62 வயதுடைய ஆஸ்திரேலியப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பூங்காவில் நடைப்பயணம் (hiking) சென்றதாகக் கருதப்படும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் கடைசியாக ஏப்ரல் 15 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது தான் நோவா ஸ்கோடியா (Nova Scotia) […]
ஹர்ஷன சூரியப்பெருமவின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை கோரப்பட்டது

திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அச்சல திவாக என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாநிதி சூரியப்பெரும தனது இலங்கை கடவுச்சீட்டுடன் மேலதிகமாக அவுஸ்திரேலிய குடியுரிமையையும் கொண்டுள்ளதாக அவர் அந்த முறைப்பாட்டில் குற்றம் சுமத்தியுள்ளார். பொது திறைசேரியில் அண்மையில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு (cyber theft) சம்பவம் தொடர்பாக கலாநிதி […]
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட நிதியமைச்சு அதிகாரி சடலமாக மீட்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அதிகாரி ஒருவர் குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகாரி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அவுஸ்திரேலிய கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனை வேறொரு இடத்திற்கு திசைதிருப்பிய சைபர் […]
நல்லூரில் தமிழ்த் தேசியப் பேரவையின் மே தினக் கூட்டம்

தமிழ்த் தேசியப் பேரவையின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ். நல்லூரில் நாளை(01.05.2026) நடைபெறவுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டுக் குழு சார்பில் செல்வராசா கஜேந்திரன் விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டமானது சட்டநாதர் சிவன் வீதியிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் […]
இஸ்லாமிய மத அவதூறு; ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30.4.2026) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் இரகசியமாக உருக்குலைக்கப்படுகின்றது – சிவமோகன்

ழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் (29.04.2026) பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டதிலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் […]
இன்று கூடியது பருத்தித்துறை நகர சபை!

பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் விந்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(30) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது. முதலில் கடந்த கூட்டத்தின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன், அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன. நகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீரை மட்டும் அகற்ற வேண்டும் என்றும், பிற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதித்து சட்ட நடவடிக்கை எடுக்க […]