ஏனைய நாடுகளுடன் பார்க்கும் போது நாம் இலங்கையைச் சரியாகவே வழிநடத்துகிறோம்

“உலகநாடுகள் பலவற்றில் இன்று எரிபொருள் விலை அதிகரிப்பும், நீண்ட வரிசைகளும் காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் அத்தகையதொரு நிலை ஏற்படாத வகையில் நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம்” என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். ‘சொந்தமாக இருக்க ஓர் இடம், அழகான வாழ்க்கை’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வீடுகளை அமைப்பதற்கான நிதி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று […]
பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த இத்தாலிய தூதுவர்!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவராகப் பணியாற்றும் டாமியானோ பிராங்கோவிக், பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்துள்ளார். இங்கு பாதுகாப்புச் செயலாளரால் புதிய தூதுவர் மிகவும் உஷ்ணமாக வரவேற்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியமான இருதரப்பு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் […]
சிறைபிடிக்கப்பட்ட ஈரான் கப்பல்: 06 மாலுமிகள் விடுதலை; 22 பேர் தடுப்பில்!

அமெரிக்கக் கடற்படையினரால் ஓமன் வளைகுடாவில் சிறைபிடிக்கப்பட்ட ஈரானிய சரக்குக் கப்பலில் இருந்த 06 மாலுமிகள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாக ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 20-ஆம் திகதி, ஈரானின் கொடியுடன் பயணித்த ‘தூஸ்கா’ என்ற கொள்கலன் கப்பலை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் சிறைபிடித்தது. அமெரிக்கா விதித்துள்ள கடல்வழி முற்றுகை உத்தரவுகளைப் பின்பற்ற குறித்த கப்பல் மறுத்ததால், ஓமன் வளைகுடாவில் வைத்து அது கைப்பற்றப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தக் கப்பலில் மொத்தம் 28 […]
சந்திரனைச் சுற்றி வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகையில் வரவேற்றார் ட்ரம்ப்

சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர். விண்வெளி வீரர்களான நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடா விண்வெளி நிலையத்தின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் ட்ரம்பை சந்தித்துள்ளனர். இவர்களுடன் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேனும் கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் போது விண்வெளி ஆய்வு மட்டுமன்றி, ஈரான் போர் மற்றும் அடையாளம் […]
அரசாங்கத்திற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

அரசாங்கத்திற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அபிமானி ஜன ஜய கட்சி இன்று (30) வியாழக்கிழமை முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதுடன், அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டியிருந்த 06 லட்சம் அமெரிக்க டொலர்கள் மாயமானமை மற்றும் திறைசேரி நிதி கையாடல் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் பிரதீப் சார்லஸ் தெரிவிக்கையில், நலிந்த ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி மேலும் ஒரு தொகுதி பணம் வேறு சில தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இவ்வாறான நிதி […]
தன்னை ஒரு புனிதராகக் காட்டவே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார்

தனக்கு எதிரான விமர்சனங்களையும் குற்றங்களையும் மறைப்பதற்கும், தன்னை ஒரு புனிதராகக் காட்டுவதற்குமே பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முயற்சிக்கின்றார். அதன் ஒரு வெளிப்பாடே எம்மீதான குற்றச்சாட்டாகும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் காணி முரண்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கும், ஈ.பி.டி.பி கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அக்கட்சி திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது. யாழ். ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட ஈ.பி.டி.பி ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் […]
ஊழல் வழக்குத் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்பு இன்றைய தினம் (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் அவர்களினால் அறிவிக்கப்படவிருந்தது. எவ்வாறாயினும், இந்த வழக்குகளின் தீர்ப்பு மே மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். […]
மின்னல் குறித்த எச்சரிக்கை
நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேபோல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய […]
உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த உரையாடலின் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” மேற்கொள்ளுமாறு புதினிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் ஒரு நல்ல உரையாடலை நடத்தினோம்; உக்ரைனில் தற்காலிகப் போர் நிறுத்தம் செய்ய நான் பரிந்துரைத்தேன், […]
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை வாகரையில் அமைக்க ஆலோசனை!

வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு நேற்று (29) முன்வைக்கப்பட்டது. இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உபதவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானமாக எடுக்கப்பட்டது. இந்த சந்திப்பில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்கையில், “வாகரைப் பிரதேச சபை வருமானம் குறைவாகக் கிடைக்கும் ஒரு […]