சந்திரனைச் சுற்றி வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்களை வெள்ளை மாளிகையில் வரவேற்றார் ட்ரம்ப்

சந்திரனைச் சுற்றி வந்து வெற்றிகரமாகத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளனர்.

விண்வெளி வீரர்களான நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோக் மற்றும் கனடா விண்வெளி நிலையத்தின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் ட்ரம்பை சந்தித்துள்ளனர். இவர்களுடன் நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேனும் கலந்து கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது விண்வெளி ஆய்வு மட்டுமன்றி, ஈரான் போர் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டு குறித்தும் ட்ரம்ப் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“அவர்கள் இதை எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இதைச் செய்ய விரும்பமாட்டேன், ஆனால் நமது நாட்டைப் பெருமைப்படுத்த இவர்களைப் போன்றவர்கள் தேவை” என ட்ரம்ப் விண்வெளி வீரர்களைப் பாராட்டியுள்ளார்.

2028-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மனிதனை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் முயற்சிகள் குறித்து நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் இதன்போது விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, “எனது ஜனாதிபதி காலத்திலேயே மற்றுமொரு மனிதன் நிலவில் நடப்பதற்கான ‘நல்ல வாய்ப்பு’ உள்ளது. அதற்கான அனுமதியை நாம் வழங்கிவிட்டோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்திரனைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதே அடுத்த கட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமான பாணியில் இந்தச் சந்திப்பை ஒரு செய்தியாளர் சந்திப்பாக மாற்றிய ட்ரம்ப், பல சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளியிடத் தான் இன்னும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மற்றும் ஈரான் போர்கள் ஒரே காலப்பகுதியில் முடிவுக்கு வரும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் எஃப்பிஐ பணிப்பாளர் ஜேம்ஸ் கோமி சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

தனது முதல் பதவிக்காலத்தில் ‘ஸ்பேஸ் போர்ஸ்’ என்ற இராணுவப் பிரிவைத் தொடங்கியதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் 6-ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதியைச் சுற்றி வந்து, பூமியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தனர். ஆர்டெமிஸ் III விண்வெளித் திட்டம் 2027-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

விண்வெளி வீரர்களுடன் ட்ரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளதுடன், விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை இது நிரூபிப்பதாக ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,