பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30.4.2026) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.