தமிழ்த் தேசியப் பேரவையின் 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தொழிலாளர் தினக் கூட்டம், கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் யாழ். நல்லூரில் நாளை(01.05.2026) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டுக் குழு சார்பில் செல்வராசா கஜேந்திரன் விடுத்துள்ள அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டமானது சட்டநாதர் சிவன் வீதியிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணிப்பாளர்கள், இணையத்தள ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினருக்கும் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு 0773024316 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.