நாமல் இங்கிலாந்தில் பெரிய சொத்து வைத்திருந்தால் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியோரை இலக்கு வைத்து அப்பட்டமான பிரசாரங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தார். நாமல் இங்கிலாந்தில் இவ்வளவு பெரிய சொத்தை வாங்கியிருந்தால் அங்குள்ள புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சும்மா இருந்திருப்பார்களா? அதுவும் சட்டவிரோதப் பணமாக […]

திரு சுஜீபன் சிறிதரன் (சுஜன்)

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுஜீபன் சிறிதரன் அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிறிதரன், நித்தியராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற குணரட்ணம், கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், ஐஸ்வரியா அவர்களின் அன்புக் கணவரும், ஜாகவி, ஆழினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுஜந்தினி, சுதர்சன், மயூரன், நிரோஜன், தயாபரி, யசோதரன், யாழினி, சர்மிளா, உஷானி, […]

சடலமாக மீட்கப்பட்ட விவசாயியுடைய பிரேத பரிசோதனை வெளியீடு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் சட்டவைத்திய அதிகாரியினால் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (19) திகதி காலையில் களுவாஞ்சிகுடி கடற்கரை வீதியிலுள்ள வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மிளகாய் செய்கை தோட்டம் ஒன்றில் விவசாயியான சிறிமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் ஒருவர் தோட்டத்தில் […]

பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – பிரதமர்

பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற “South-4-Care Learning Hub: Advancing Decent Work in the Care Economy in South Asia” மாநாட்டின் ஆரம்ப அமர்வில், உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் […]

சிறப்பு விசாரணையாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு அறிவிப்பு இன்னமும் வரவில்லை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கு விசாரணையை ட்ரயல் அட்பார் முறையில் விசாரணை மேற்கொள்ளவதாக பிரதம நீதியரசர் இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கவில்லை. அவ்வாறு இருக்கையில் 3ஆம் தரப்பு யாராவது தெரிவிப்பதாக இருந்தால், அது பிரதம நீதியரசரின் அதிகாரத்தின் மீது தலையிடுவதாகும் என்பதுடன் சட்டத்தை மீறும் செயலாகும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் […]

ஷம்மி சில்வா ‘போல்ட் அவுட்’: இடைக்காலக் குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன?

இலங்கையில் ஊழலுக்கு எதிராகப் போராடுபவர்களும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின்) நீண்டகாலத் தலைவராக இருந்த ஷம்மி சில்வாவை பதவி விலகுமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். ஷம்மி சில்வாவுக்குப் பதிலாக முன்னாள் ரோயல் கல்லூரி கிரிக்கெட் வீரரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எரான் விக்கிரமரத்ன ஒரு இடைக்காலக் குழுவின் ஊடாக நியமிக்கப்பட உள்ளதாக ‘டெய்லி மிரர்’ தெரிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து […]

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு SLCPI கோரிக்கை

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான பாரிய நெருக்கடி உருவாவதைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) கோரிக்கை விடுத்துள்ளது. மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அது எச்சரித்துள்ளது. உடனடியான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் அரச சுகாதாரத் துறைகளில் மருந்துத் தட்டுப்பாடு அதிகரித்து, நோயாளர்கள், வைத்தியசாலைகள், […]

பெண்ணொருவர் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்: 9 சந்தேகநபர்கள் கைது

சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய,  பெண்ணொருவரை வீதியில் வைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கொகரெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி கொகரெல்ல, மெதலந்த பிரதேசத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து நாடு முழுவதும் அவதானம் திரும்பியது. தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த நிலையில், கொகரெல்ல […]

கைது செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில்…

கைது செய்யப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (22) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, துப்பாக்கியைக் காட்டி நபரொருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியா பகுதிக்கு வருகை தந்திருந்த போது, அவிசாவளையிலிருந்து சுற்றுலா வந்திருந்த குழுவினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது […]