பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பென ஜனாதிபதி கூறியது அப்பட்டமான பொய் – புதிய மக்கள் முன்னணி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறிய கருத்துக்கள் அப்பட்டமான பொய். மகா சூத்திரதாரியை நாட்டுக்கு வெளிப்படுத்துவதாக கூறிய தற்போதைய அரசாங்கத்தின் மற்றுமொரு இழுத்தடிப்பு நாடகம் நீதிமன்ற அறிக்கைகள் ஊடாக அம்பலமாகியுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். புதிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு […]

இலங்கையின் தற்போதைய வணிகச் சூழல் இன்னும் சர்வதேச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை – சீனத் தூதுவர்

சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் வணிகச் சூழலுக்கு ஆதரவளிக்கவும் அரசாங்கம் எடுத்துள்ள நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகளை கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் சி சென்ஹொங் (Qi Zhenhong) வரவேற்றுள்ளார். எனினும், இலங்கையின் தற்போதைய வணிகச் சூழல் இன்னும் சர்வதேச எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார மீட்சியில் அரசாங்கம் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளதுடன், சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடைமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சீனத் தூதுவர் தெரிவித்தார். “இருப்பினும், […]

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிக்கப்போவதாகவும், முற்றுகையைத் தொடரப்போவதாகவும் ட்ரம்ப் அறிவிப்பு

பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கிணங்க, ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிக்கும் என்றும், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடரும் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “ஈரான் அரசாங்கம் கடுமையாக பிளவுபட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும் (இது எதிர்பாராதது அல்ல), பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஈரானியத் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை (unified proposal) முன்வைக்கும் வரை […]

உலக சந்தையில் எரிபொருள் விலையைஅரசாங்கத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது ஆனால் தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்படும்: புதிய எரிசக்தி அமைச்சர்

மின்சாரம் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய சேவைகளை பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். புதிய எரிசக்தி அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய அவர் அமைச்சரவை மாற்றங்கள் ஏற்பட்டாலும் தேசிய எரிசக்தி கொள்கைகள் நீண்டகால இலக்குகளுடன் சீராக இருக்கும் என்று குறிப்பிட்டார். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு வசதி செய்யும் […]

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஞானசார தேரர் அழைப்பு

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ள மெல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புவாய்ந்த தரப்பினரும், இதுதொடர்பான “நடிப்பை” நிறுத்திக்கொண்டு, விசாரணைகளை ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தேரர், சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடைய தீவிரவாதக் கருத்துக்களைப் போதிக்கும் நடவடிக்கைகள், பாடசாலைப் பாடப்புத்தகங்கள் முதல் பயிற்சி முகாம்கள் வரை […]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரைப் பகுதியில் ஒளிக்கற்றைகளைப் (Light Course) பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ள வெற்றிலைக்கேணி கடற்படை அவர்கள் பயன்படுத்திய படகுகள், மற்றும் மின் உபகரணங்கள் உட்பட மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று இரவு 10:40 மணியளவில், புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நான்கு படகுகளில் சட்டவிரோத மின் ஒளி பாய்ச்சியும் மற்றும் மின்கலங்களைப் […]

“எங்களிடம் அதிக நேரம் இல்லை” ஈரான் மீதான குண்டுவீச்சு மீண்டும் ஆரம்பமாகும் – ட்ரம்ப்

இரண்டு வார கால போர்நிறுத்தத்தை நீடிக்கத் தான் விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “எங்களிடம் அதிக நேரம் இல்லை” என்று குறிப்பிட்ட அவர், விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் குண்டுவீச்சைத் தொடங்கும் என்று எச்சரித்துள்ளார். ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடல் எல்லையில் அமெரிக்காவின் பிடியில் சிக்கிய ‘ஈரான்’ தொடர்பு கப்பல்!

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ‘மெரீன் ட்ராஃபிக்’ (Marine Traffic) தரவுகளின்படி, இது சுமார் 3 இலட்சம் தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் […]

இந்தியத் துணை ஜனாதிபதி தமிழ் கட்சிகளுக்கு தெரிவித்த விடயத்தின் ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் – சீ.வி.கே. சிவஞானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக் சுட்டிக்காட்டிய இந்தியத் துணை ஜனாதிபதி, அவற்றை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “இந்தியத் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்கள், எனதும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனதும் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘தற்போது அரசியல் கட்சிகள் […]

நாட்டில் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

வர்த்தக விசா மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் நேற்று(21) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 47 சீனப் பிரஜைகளும், இரண்டு மலேசியப் பிரஜைகளும், ஒரு இந்தியப் பிரஜையும் அடங்குகின்றனர். நீர்க்கொழும்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிவரவு […]