ஈஸ்டர் தாக்குதலில் மரித்த ஆத்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

ஈஸ்டர் தாக்குதலிலே தொடர்புபட்டவர்கள்காலம் கடந்தும் தண்டிக்கப்படுவது என்பது கானல் நீராகவே இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடைபெற்ற மாகான சபை முறைமைகளும் அதிகார பகிர்வும் எனும் கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் பல்வேறு சம்பவங்களை செய்து வருகின்றது என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும் […]

ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல்!

ரான் தனது வளைகுடா அண்டை நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அபுதாபியில் போரூஜ் பெட்ரோ (Chemical) இரசாயன ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரும், நிவாரணக் குழுக்களும் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றி வருவதாக அபுதாபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “வான் பாதுகாப்பு அமைப்புகளின் வெற்றிகரமான இடைமறிப்புகளுக்குப் பிறகு விழுந்த இடிபாடுகளால், ஆலையில் பல தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் பதிலளித்து வருகின்றனர்,” என்று அந்த வளைகுடா அமீரகத்தின் ஊடக அலுவலகம் […]

40,000 உயிர்களைக் காத்த இயந்திரத்திற்கு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரியாவிடை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் கடந்த 15 வருடங்களாகச் சேவையாற்றி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காக்க உதவிய Cath Lab இயந்திரம் நேற்றுடன் (சனிக்கிழமை) தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றது. 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிலிருந்த இந்த இயந்திரம், சுமார் 40,000-க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்குச் சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காக்கப் பேருதவியாக இருந்தது. சிகிச்சைகள்: இதய இரத்தக் குழாய் அடைப்புகளைக் கண்டறியும் Angiogram, அடைப்புகளை நீக்கும் Angioplasty, இதய வால்வு திருத்தங்கள் மற்றும் Pacemaker பொருத்துதல் […]

தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சியோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுக்காப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (05) இடம்பெற்றது. கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அங்கு 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர். குறித்த தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்று 6 வருடம் முடிந்தும் நீதி கிடைக்காத நிலையில் இன்று உயிர்த்த […]

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் அதிமுகவில் இணைந்தது!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் (மூ.மு.க) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை (EPS) நேரில் சந்தித்து தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்த அதிரடி முடிவு தமிழக அரசியலில், குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் புதிய சமன்பாடுகளை உருவாக்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீதர் வாண்டையார் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, தஞ்சாவூர் […]

விஜய்யின் வருகை திமுக கூட்டணியை தான் பாதிக்கும்

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். தவெக விஜய் திருமாவளவன் வாக்குகளை தான் பிரிப்பார் என அடித்து கூறியிருக்கின்றார் எச்.ராஜா. மேலும் விஜய்யின் வருகை திமுகவிற்கு ஆபத்து எனவும் பேசினார் இந்த தேர்தலில் தவெக என்ற புதிய கட்சி களமிறங்கவுள்ளது. எனவே விஜய்யின் தலைமையிலான தவெக கட்சியின் வருகை யாருக்கு பாதிப்பை கொடுக்கும். திமுகவின் வாக்குகளை பிரிக்குமா ? அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்குமா ? எந்த கூட்டணிக்கு தவெக தலைவலியாக […]

‘டிமான்டி காலனி 3 ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டிமான்டி காலனி 3 ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஹொலிவுட் நடிகர் ஆன்ட்டி ஜாஸ் கெலைனன், குரு சோமசுந்தரம் ,ஜி. எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர் , ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ […]

சாரா அர்ஜுன் ஹீரோயினாகினார்!

ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஆடிஷனுக்கு வர வைத்த போதிலும் சாரா அர்ஜுனை துரந்தர் படத்திற்காக தேர்வு செய்தார்கள். சாராவின் அப்படி என்ன ஸ்பெஷல் என்று காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சப்ரா கூறியிருக்கிறார். ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 19ம் தேதி வெளியான துரந்தர் 2 படத்தின் வசூல் வேட்டை குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். துரந்தர் 2 படம் திரைக்கு வந்த 17 நாட்களில் உலக அளவில் ரூ. 1, 560 கோடி […]

‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீடு

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன்,குஷி ரவி , கௌசல்யா , மைம் கோபி , வை . ஜி . மகேந்திரா , லிர்த்திகா , சேலம் தீபக், இலா பரத், சுதா , ஜோதிகண்ணன் உள்ளி ட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே .ரவி […]

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஒன்ஸ்மோர் ‘

தன்னுடைய தனித்துவமான குரல் மூலம் உலகம் முழுதும் ரசிகர்களை வசப்படுத்திய நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இன்னிசையுடன் கூடிய காதல் கதையாக தயாராகி […]