தன்னுடைய தனித்துவமான குரல் மூலம் உலகம் முழுதும் ரசிகர்களை வசப்படுத்திய நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். இன்னிசையுடன் கூடிய காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத பின்னணி பாடகர் ஹனான் ஷா பாடியிருக்கிறார். இந்த பாடலில் புதுமுக நடிகை சோனா ஒலிக்கல் மற்றும் அர்ஜுன் தாஸ் லவ் கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.