இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் நிலவும் விலை மாற்றங்களுக்கு அமைவாக, உள்நாட்டு லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று (ஏப்ரல் 5) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலை விபரங்கள்: 12.5 கிலோ சிலிண்டர்: இதன் விலை 775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 4,765 ரூபாவாகும். 5 கிலோ சிலிண்டர்: இதன் விலை 308 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 1,910 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2.3 கிலோ […]

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நெல்லியடியில் இளைஞன் கைது

அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளை உடமையில் வைத்திருந்த ஒருவரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கரணவாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத விற்பனைக்காகத் தன்வசம் வைத்திருந்த ‘Pregabalin’ எனப்படும் 520 போதை மாத்திரைகள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸார், அவரை நாளை பருத்தித்துறை நீதவான் […]

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு: பின்னணியில் உள்ள உண்மைகள் வெகுவிரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா

யிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஒருசிலர் இது தொடர்பாக நூல் வெளியிட்டு திசைதிருப்ப முயன்றாலும், உண்மை மறைக்கப்படாது என அவர் குறிப்பிட்டார். சர்வதேச ரீதியில் நிலவும் மத்திய […]

புங்குடுதீவு மாணவி வித்யா கொலை வழக்கு கைதி: பெண் மருத்துவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சி?

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண் மருத்துவர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேகலை தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது, அவரைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென மருத்துவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். சம்பவம் […]

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள ஈரானின் மனிதாபிமான அறிக்கை

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானிடம் பிடிபட்டுள்ள அமெரிக்க விமானி குறித்து அந்நாடு வெளியிட்டுள்ள மனிதாபிமான அறிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தமது மகன் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமெரிக்க விமானியின் தாயார் தனது கவலையையும் மகனை விடுவிக்கக் கோரும் மன்றாட்டத்தையும் ‘X’ (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். ஒரு தாயின் உருக்கமான இந்த வேண்டுகோள் உலகம் முழுவதும் பரவலான அதிர்வை ஏற்படுத்தியது. ஈரானின் பதில்: விமானியின் தாயாரின் […]

ஆரோக்கியமான சமுதாயமே அறிவுபூர்வமான போராட்டங்களை முன்னெடுக்கும்!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின், மாணவர்களுக்கான போசாக்கு வழங்கும் செயற்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. ​இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். ​தையற்கலைப் பயிலரங்கினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வினைத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்: ​”இன்றைய இந்தச் சத்துணவு வழங்கும் நிகழ்வு என்பது வெறும் பசியாற்றும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; இது ஒரு இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமானதொரு ஆரம்பப்புள்ளி. ஒரு தேசத்தின் […]

அரசடியில் உணவக ஊழியர் மீது தாக்குதல்: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, அரசடிப் பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) நள்ளிரவு 12 மணியளவில், மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழுவொன்று கொத்து ரொட்டி ஓடர் செய்துள்ளனர். உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள், கொத்து ரொட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியரை தலைக்கவசத்தால் (Helmet) கடுமையாகத் தாக்கியுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த ஊழியர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் […]

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்!

வவுனியா, மரக்காரம்பளை கிராமத்தில் சனிக்கிழமை  இரவு புகுந்த காட்டு யானைகள், விளைச்சலில் இருந்த பெருமளவிலான தென்னை மற்றும் வாழை மரங்களை அழித்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. தோட்ட நிலங்களுக்குள் புகுந்த யானைகள், காய்க்கும் நிலையில் இருந்த 18-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், 50-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் முற்றாக நாசமாக்கியுள்ளன. அச்சத்தில் மக்கள்: நகரின் எல்லைக் கிராமமான மரக்காரம்பளையில் பொதுவாக யானை நடமாட்டம் குறைவாகவே காணப்படும். ஆனால், எதிர்பாராத விதமாக நேற்று இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் கிராம […]

ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரான் “நரகமாகும்” – டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின்​ஹோர்முஸ் நீரிணை(Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படாவிட்டால் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க, ஈரானுக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 6, 2026) வரை டிரம்ப் அவகாசம் அளித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆவேசமாக பதிவிட்டுள்ள அவர், “செவ்வாய்க்கிழமை என்பது ஈரானில் ‘மின் நிலைய […]

தனியாரிடம் நெடுந்தீவுக்கான படகுச்சேவை

நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன், தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது. நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் எ ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை. இதேவேளை, வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் […]