சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு தருமை ஆதீனம் விஜயம்

இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் நேரடி தரிசனம் மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சுவாமிகளை வரவேற்றார்.
டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய சமூகத்தினருக்கும் பிரத்தியேக இணையத்தளம்

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த […]
இடமாற்ற சபையின் ஊடாக வெளிமாவட்ட ஆசிரியர்களை கடமைகளைப் பொறுப்பேற்க இடமளிக்க வேண்டும்!

இடமாற்ற சபையின் ஊடாக வருடாந்த இடமாற்றங்களை பெற்ற வெளி மாவட்ட ஆசிரியர்கள் உரிய முறையில் தமது பாடசாலைகளை பொறுப்பெடுக்க அனுமதிக்காவிட்டால் வடமாகாண ஆளுநர் செயலகத்தை முடக்கி போராட்டம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாண ஆசிரியர்களை மோத விடும் வடமாக ஆளுநரின் அரசியல் விளையாட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முறியடிக்கப்பட்டுள்ளது. மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக […]
அனுமதியற்ற கட்டடங்கள் வேலணையில் கட்டப்படுகின்றன?

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி தனி நபர்களால் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை வகைதொகை இன்றி அதிகரித்துச் சென்றுகொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பிரதேச சபையும் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பிரதேச சபையின் ஒரு சில உறுப்பினர்களும் பின்னணியில் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பிரதேச சபையின் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினாலும் அவர்களுக்கு இடையூறாக […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பு — சஜித்
2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாக்குதல் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (ஏப்ரல் 5) விடுத்துள்ள தனது ஈஸ்டர் செய்தியில் பிரேமதாச பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்: ஈஸ்டர் என்பது நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களைக் […]
கனடா, சீனாவில் வங்கி விரிவாக்கத்தை முன்னெடுத்து ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்!

அமெரிக்காவைத் தாண்டித் தனது வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தும் நோக்கில், சீனாவில் நிதிச் சேவைத் துறையை (Financial Services) விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை கனடா முன்னெடுத்து வருகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் தனது ஏற்றுமதியை 50% ஆக உயர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு, சீனாவில் கனடிய நிதிச் சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது அவசியமானதாகும். கனடாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதன் மூலம், அமெரிக்கா மீதான பொருளாதாரச் சார்பைக் குறைக்க கனடா முயற்சிக்கிறது. ஐந்து […]
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தயாநந்தன் ஜெயச்சித்திராவுக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அழைப்பாணை!

இலங்கைத் தமிழரசுக்கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி வட்டாரத்தின் அமைப்பாளருமான திருமதி. தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். . இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த கால அரசாங்கங்களைப் போலவே, மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் அதே பாணியில் […]
புதுச்சேரி மீனவர்களுடனான சந்திப்பு குறித்து இலங்கை இராஜதந்திரி விளக்கம்

தென்னிந்தியாவிற்கான இலங்கைத் துணைத் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் , தாம் ஏதேனும் அரசியல் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர் சந்திப்பில் பங்கேற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) நிராகரித்துள்ளார். இது ஒரு “வழக்கமான பயணம்” என்றும், எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யவில்லை என்றும் கூறிய அவர், “நான் இங்கு அரசியல் செய்ய வரவில்லை” எனத் தெரிவித்தார். காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பவன் கெரா, மார்ச் கடைசி வாரத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் […]
சர்வதேச நாணய நிதியத்திடம் மேலதிக நிதி கோரும் திட்டம் இல்லை – நிதி அமைச்சு

அண்மைக்காலமாகப் பேரிடர் கால அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து மேலதிக நிதியுதவியைக் கோரும் திட்டம் தற்போது இல்லையென நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதார மீட்புத் திட்டம் தற்போதுள்ள நிதிச் சட்டகத்திற்குள்ளேயே சரியான பாதையில் பயணிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிதி அமைச்சின் நிதித்துறைக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனநாயக்க இது குறித்துக் கூறுகையில்: “கடந்த 2025 டிசம்பரில் IMF இன் பிந்திய தவணைப் பணத்தைப் பெற்றுக்கொண்டோம். […]
உங்கள் வாழ்விற்கென உயரிய இலக்குகளை நிர்ணயித்து அதனை நோக்கி உறுதியுடன் நகருங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

கிளிநொச்சி நகர வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற, உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் முதலிடம் பெற்ற சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார். இன்று எமது மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். உங்கள் ஒவ்வொருவருடைய வெற்றியும் வெறும் தனிமனித வெற்றிகளல்ல; அவை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு வலிமையான செய்தியைச் சொல்கின்றன. “எத்தகைய இடர்பாடுகள் […]