டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய சமூகத்தினருக்கும் பிரத்தியேக இணையத்தளம்

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டனர்.

அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23, 192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில்

முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது

வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது