தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தயாநந்தன் ஜெயச்சித்திராவுக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அழைப்பாணை!

இலங்கைத் தமிழரசுக்கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி வட்டாரத்தின் அமைப்பாளருமான திருமதி. தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த கால அரசாங்கங்களைப் போலவே, மாற்றம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான அச்சுறுத்தல்களையும் அடக்குமுறைகளையும் அதே பாணியில் தொடர்வதை இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இது குறித்துக் காவல்துறை வழங்கிய அழைப்பாணையில், எதிர்வரும் 2026.04.07 அன்று காலை 10:00 மணிக்கு கொழும்பிலுள்ள விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

​ திருமதி. தயாநந்தன் ஜெயச்சித்திரா அவர்கள் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவால் (TID) மூன்றாவது முறையாகவும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஒரு தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரைத் தொடர்ச்சியாகக் கொழும்புக்கு அழைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​கடந்த கால ஆட்சியாளர்களின் கொள்கைகளையே தற்போதைய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்டு வருவதோடு, இவ்வாறான அநீதியான செயல்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுவது பாரிய ஜனநாயக விரோதச் செயலாகும். ​தமிழ் மக்களின் அரசியல் குரல்களை நசுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்