மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் வகையில் உலகம் முழுவதும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு, நேற்று (04) சனிக்கிழமை இரவு நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் விசேட நள்ளிரவுத் திருப்பலிகள் இடம்பெற்றன. மன்னார் மாவட்டத்திலும் பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெற்றதோடு, தேவாலயங்களைச் சூழப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி நேற்று இரவு 11.15 […]
ஈரானின் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – ஐ.நாவுக்கு ஈரான் கடிதம்!

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. அணுசக்தி நிலையத்திற்கு மிக அருகில் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, […]
ஈரானிய இராணுவத் தளபதிகள் பலி: ட்ரம்ப் அறிவிப்பு
டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு வழங்கிய 48 மணிநேரக் காலக்கெடு முடிவடைவதற்கு முன்னரே இந்தத் தாக்குதல்கள் […]
தமிழ்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் பிரதித் தூதுவர்தூதர் தலையீடு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதித் தூதுவர் கணேசநாதன் கேதீஸ்வரன் தமிழ்நாட்டின் (மற்றும் புதுச்சேரியின்) உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் பவன் கெரா (Pawan Khera) குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி, வைத்திக்குப்பம் பகுதியில் உள்ளூர் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறியும் நிகழ்வொன்றில் தூதர் கணேசநாதன் கேதீஸ்வரன் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பை லட்சிய ஜனநாயக் கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாரதிய ஜனதா கட்சியின் […]
அமெரிக்க விமானிமீட்பு நடவடிக்கையின் போது அமெரிக்க – ஈரானிய வீரர்களிடையே நேரடி மோதல்

அமெரிக்க விமானப்படை அதிகாரியை மீட்கும் அதிரடி நடவடிக்கையின் போது, அமெரிக்கச் சிறப்புப் படை வீரர்களுக்கும் ஈரானிய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை (Firefight) நடந்ததாக வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சிக்கலான மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கான சிறப்புப் படை வீரர்களும் (Special Forces), போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. தரைவழியாகவிமானியை நெருங்கும் போது, ஈரானியப் படைகளுடன் அமெரிக்க வீரர்கள் நேரடித் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்கத் தரப்பில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. […]
உலகை ஆள வேண்டும் என்ற தனி மனிதனின் பேராசையால் ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருகிறது!

தற்போது உலக அமைதி சீர்குலைந்துள்ளதாகவும், உலகை ஆள வேண்டும் என்ற ஒரு தனிமனிதனின் பேராசை காரணமாக ஒட்டுமொத்த மனிதகுலமும் வேதனையை அனுபவித்து வருவதாகவும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரதான திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கிறிஸ்தவம் என்பது வெறும் பிரார்த்தனை செய்வது அல்லது புனித பைபிளின் பகுதிகளை வாசிப்பது மாத்திரம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க அரசாங்கத்தினால் முடியும்

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரச்சினைகளுக்கும் எதிர்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பயிற்சிக்கு பிந்தைய வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்காக 453 வைத்தியர்களில் 435 பேர் விண்ணப்பித்துள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். தற்போது […]
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கடவத்தை, இந்தகஹமுல சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த நபர், அதே திசையில் பயணித்த மோட்டார் கார் ஒன்றுடன் மோதி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கடவத்தை பொலிஸார் […]
நாளை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளே இந்தப் போராட்டத்திற்கான பிரதான காரணம் என அச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் […]
உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பெருவிழா, இன்று (05) மலையகப் பகுதிகளில் மிகுந்த பக்திப்பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஹட்டன் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பிரதான தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன. ஹட்டன் புனித சிலுவை தேவாலயத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெற்ற பிரதான ஆராதனைகளுக்கு, அந்த ஆலயத்தின் திருத்தலப் பொறுப்பாளர் அருட்தந்தை எட்வின் ரொட்ரிகோ தலைமை தாங்கினார். இதேவேளை, நுவரெலியா […]