ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சி

எரிபொருள், நிலக்கரி மற்றும் உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து விலக்கு (Waiver) அளிக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க விசேட தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) அவர்களிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போதைய நிலை: மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய 30 நாள் சலுகை ஏப்ரல் 11-டன் முடிவடைகிறது. குறைந்தது […]
இலங்கைக்கு எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா!

இலங்கையில் நிலையான எரிபொருள் விநியோகத்தைப் பேணும் நோக்கில், முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் இருப்புக்களை வழங்க சீனா முன்வந்துள்ளது. சீன தூதர் கி சென்ஹாங் (Qi Zhenhong), ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவளிக்க உறுதி அளித்தார். முதலாவது கப்பல்: சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘சினோபெக்’ (Sinopec) நிலையங்களுக்கு வழங்கப்படும் […]
போர்ப் பதற்றம்; இலங்கை சுற்றுலாத்துறைக்கு மாதம் $70 மில்லியன் இழப்பு

இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இலங்கை சுற்றுலாத்துறை மாதம் தோறும் சுமார் 70 மில்லியன் டொலர்களை இழந்து வருவதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது. கடந்த 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.7% வீழ்ச்சியடைந்துள்ளது. (கடந்த ஆண்டு 229,298 பேர்; இந்த ஆண்டு 183,979 பேர்). துபாய், தோஹா போன்ற முக்கிய விமான போக்குவரத்து மையங்கள் […]
அன்னை பூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு

இன்று காலை 9.30 மணிக்கு வலி வடக்கு தொகுதி அலுவலகத்தில் அன்னை பூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு 18 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு வலி வடக்கின் கௌரவ உறுப்பினர் குலத்துங்கம் வில்வராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். வலி வடக்கின் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் தயானி சந்திரன் அவர்கள் மலர் மாலையை அணிவித்து […]
அமெரிக்க விமானியை மீட்டதை உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்
ஈரானில் ட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து காணாமல் போன விமானி ஒருவரை, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E ஸ்டிரைக் ஈகிள் (F-15E Strike Eagle) போர் விமானத்தில் பணியாற்றிய கேர்ணல் (Colonel) அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். ஈரானின் மலைப்பாங்கான பகுதியில் எதிரிகளின் எல்லைக்குள் சிக்கியிருந்த அந்த அதிகாரியை மீட்க, […]
மனிதாபிமானம் மற்றும் சகிப்புத்தன்மையை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு – ஜனாதிபதி அநுர குமார

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவு கூர்ந்து, இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர். இது, நம்பிக்கை, புதிய மாற்றம் மற்றும் கருணையின் நித்திய சக்தியை நினைவூட்டுகின்றது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தியில் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு என்பது ஒரு மத நிகழ்வு என்பதைத் தாண்டி, அது […]
யாழ். மக்களின் விருந்தோம்பல் எம்மைக் கவர்ந்துள்ளது – இந்திய துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர்

இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினர், அங்குள்ள மக்களின் வரவேற்பு மற்றும் பிரதேசத்தின் அழகு குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 40 பேர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர். ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர்கள் கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் […]
யாழில் சுகாதார விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் மடக்கிப் பிடிப்பு – வலி. தெற்கு தவிசாளரின் முக்கிய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெதுப்பக (Bakery) உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக ஏற்றிச் சென்ற நான்கு வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஷின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இந்த வாகனங்கள் சிக்கின. சிக்கிய வாகனங்கள்: கடைகளுக்குப் பொருட்களை விநியோகித்த இரண்டு வாகனங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று விற்பனை செய்த இரண்டு முச்சக்கர வண்டிகள் என மொத்தம் 4 வாகனங்களின் சாரதிகளுக்கு எதிராக வழக்குத் […]
வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த 21 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவினர் போதை மாத்திரை வாங்குபவர்கள் போல அந்த இளைஞனிடம் தொலைபேசியில் பேசி, ‘புறாப்பொறுக்கி’ பகுதிக்கு வரவழைத்து அவரை மடக்கிப் பிடித்தனர். கைப்பற்றப்பட்டவை: அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக […]
மறைந்த ஈரானிய தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் கைது – அமெரிக்கா

ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மறைந்த தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரை அமெரிக்கா கைது செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. சுலைமானியின் மருமகள் ஹமிதே சுலைமானி அஃப்ஷர் (Hamideh Soleimani Afshar) மற்றும் அவரது மகள். அவர்களின் அமெரிக்க நிரந்தர குடியிருப்பு உரிமையை (Green Card) வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ரத்து செய்ததை அடுத்து, அவர்கள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் (ICE) காவலில் வைக்கப்பட்டுள்ளனர். […]