யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளில் நீண்டகாலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த 21 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினர் போதை மாத்திரை வாங்குபவர்கள் போல அந்த இளைஞனிடம் தொலைபேசியில் பேசி, ‘புறாப்பொறுக்கி’ பகுதிக்கு வரவழைத்து அவரை மடக்கிப் பிடித்தனர்.
கைப்பற்றப்பட்டவை: அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 520 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தை மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக சில மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட அந்த இளைஞனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர் பதுக்கி வைத்திருந்த மேலும் பல மாத்திரைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.