கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.
ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல…
அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட…
ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை…
ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை…
ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம்…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி என்ற தொனிப்பொருளில் மேற்படி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கனேடிய நேரம் இன்று காலை 9.30 மணியளவில் Markham & Steeles – John Daniels Park இல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட சில பிரமுகர்கள் நிகழ்வின் ஆரம்பத்தில் புற்றுநோய் விழிப்புணர்வின் தேவை குறித்தும் நடைபவனியை வரவேற்றும் தமது கருத்துக்களை வழங்கினார்கள்.
சுமார் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்ட இந்த நடைபவனியில் இருசக்கர நாற்காலியை உபயோகப்படுத்துகின்றவர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.