கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன. ஒரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட… ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம்… புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி […]

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில […]

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. நேற்றையதினம் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் இன்றைய தினம் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இசைத் துறையின் வரலாற்றில் ஒரு மைக்கல்லாக இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆய்வு மாநாடானது […]

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வான்கூவர் காவல்துறையின் டிஜிட்டல் சான்றுகள் மற்றும் சைபர் குற்றப் பிரிவு (Digital Evidence Cybercrime Unit – DECU) துப்பறியப்பாளர்களால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெனிபர் ஹூக்ஸ் (Jennifer Hooks) என்ற அந்தப் பெண் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது பின்வரும் பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன: பாலியல் ரீதியிலான […]

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை பீல் பிராந்திய போலீஸார் (Peel Regional Police) வெளியிட்டுள்ளனர். அத்துடன், அந்த நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை அவர்கள் மீண்டும் கோரியுள்ளனர். சந்தேக நபர் கடைசியாக மிசிசாகா சிட்டி சென்டர் பேருந்து நிலையத்தை (Mississauga City Centre Bus Terminal) நோக்கிச் சென்ற பேருந்து ஒன்றில் ஏறியது தெரியவந்துள்ளது. போலீஸாரின் அவசர வேண்டுகோள்: புகைப்படத்தில் […]

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்  பிணையில் விடுவிக்கப்பட்ட முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கலைஞர் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து தான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். “இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் […]

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்ய முயன்ற வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கைலண்ட் கூட் (Kailend Coote) என்ற அந்த இளைஞருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகே பரோல் (Parole) கோரி விண்ணப்பிக்கும் தகுதி வழங்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பின்னணி மற்றும் கொடூரத் தாக்குதல்: கடந்த 2022 […]

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில் டிக்கெட்டுகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கும் ரசிகர்களைக் குறிவைத்து இணையவழி மோசடிப் பேர்வழிகள் (Scammers) தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 39 நாட்கள் நீடிக்கும் இந்த பிரம்மாண்ட கால்பந்து திருவிழாவைக் காண உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கு எதிரான […]

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். டொராண்டோவின் ஈஸ்ட் யார்க் (East York) பகுதியில் உள்ள டான் மில்ஸ் சாலை (Don Mills Road) மற்றும் ஓ’கானர் டிரைவ் (O’Connor Drive) சந்திப்புக்கு அருகில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த […]